ரேணிகுண்டா
ரேணிகுண்டா
திருப்பதி - ரேணிகுண்டா | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திர பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி மாவட்டம் |
ஏற்றம் | 107 m (351 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 78,000 |
மொழிகள் | |
• ஆட்சி் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 517520 |
தொலைபேசிக் குறியீடு | 0877 |
வாகனப் பதிவு | AP 03 |
ரேணிகுண்டா என்பது திருப்பதியின் புறநகர் பகுதியாகும். இந்த பகுதியையும் அருகில் உள்ளவற்றையும் இணைத்து, ரேணிகுண்டா மண்டலம் உருவாக்கப்பட்டது. இதை திருப்பதியின் வாயிலாகக் கருதுகின்றனர்.
வரலாறு
[தொகு]இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.
மக்கள்
[தொகு]இங்கு 78000 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.
இவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது நாட்டின் மொத்தன் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.[1]
ஆட்சி
[தொகு]இந்த மண்டலத்தின் எண் 12. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
[தொகு]ரேணிகுண்டா மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. [3]
- பாலுபல்லி
- மாமண்டூர்
- எர்ரகுண்டா
- கிருஷ்ணாபுரம்
- சீனிவாசௌதாசிபுரம்
- தர்மாபுரம் கண்டுரிகா
- ஆர். மல்லவரம்
- ஆனகுண்டா
- வெதுள்ளசெருவு
- ரேணிகுண்டா அக்ரகாரம்
- எர்ரகுண்டா
- வெங்கடபுரம்
- அன்னசாமிபல்லி
- எர்ரமரெட்டிபாலம்
- தூகிவாகம்
- எலமண்டியம்
- கொத்தபாலம்
- அதுசுபாலம்
- குரு கால்வா
- கிருஷ்ணய்ய கால்வா
- ஜீபாலம்
- நல்லபாலம்
- தாத்தய்ய கால்வா
- காஜுலமண்டியம்
- சஞ்சீவராயனிபட்டேடா
- கொற்றமங்கலம
- தண்டுலமங்கலம்
- சூரப்பகசம்
- மொலகமுடி
- அம்மவாரிபட்டேடா
- அத்தூர்
உசாத்துணை
[தொகு]- ↑ [1] Renigunta Mandal Demographics
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
புற இணைப்புகள்
[தொகு]- [2] பரணிடப்பட்டது 2008-05-21 at the வந்தவழி இயந்திரம் Madras and Southern Mahratta Railway by John Hinson