ரேணிகுண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணிகுண்டா
திருப்பதி - ரேணிகுண்டா
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திர பிரதேசம்
மாவட்டம்திருப்பதி மாவட்டம்
ஏற்றம்107 m (351 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்78,000
மொழிகள்
 • ஆட்சி்தெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN517520
தொலைபேசிக் குறியீடு0877
வாகனப் பதிவுAP 03

ரேணிகுண்டா என்பது திருப்பதியின் புறநகர் பகுதியாகும். இந்த பகுதியையும் அருகில் உள்ளவற்றையும் இணைத்து, ரேணிகுண்டா மண்டலம் உருவாக்கப்பட்டது. இதை திருப்பதியின் வாயிலாகக் கருதுகின்றனர்.

வரலாறு[தொகு]

இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.

மக்கள்[தொகு]

இங்கு 78000 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 52 சதவிகிதமும், பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.

இவர்களில் சராசரியாக 77 சதவிகிதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். இது நாட்டின் மொத்தன் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 12. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

ரேணிகுண்டா மண்டலத்தில் 31 ஊர்கள் உள்ளன. [3]

  1. பாலுபல்லி
  2. மாமண்டூர்
  3. எர்ரகுண்டா
  4. கிருஷ்ணாபுரம்
  5. சீனிவாசௌதாசிபுரம்
  6. தர்மாபுரம் கண்டுரிகா
  7. ஆர். மல்லவரம்
  8. ஆனகுண்டா
  9. வெதுள்ளசெருவு
  10. ரேணிகுண்டா அக்ரகாரம்
  11. எர்ரகுண்டா
  12. வெங்கடபுரம்
  13. அன்னசாமிபல்லி
  14. எர்ரமரெட்டிபாலம்
  15. தூகிவாகம்
  16. எலமண்டியம்
  17. கொத்தபாலம்
  18. அதுசுபாலம்
  19. குரு கால்வா
  20. கிருஷ்ணய்ய கால்வா
  21. ஜீபாலம்
  22. நல்லபாலம்
  23. தாத்தய்ய கால்வா
  24. காஜுலமண்டியம்
  25. சஞ்சீவராயனிபட்டேடா
  26. கொற்றமங்கலம
  27. தண்டுலமங்கலம்
  28. சூரப்பகசம்
  29. மொலகமுடி
  30. அம்மவாரிபட்டேடா
  31. அத்தூர்

உசாத்துணை[தொகு]

  1. [1] Renigunta Mandal Demographics
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணிகுண்டா&oldid=3855561" இலிருந்து மீள்விக்கப்பட்டது