பியூபோர்ட்
பியூபோர்ட் நகரம் | |
---|---|
Beaufort Town | |
சபா | |
சபாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°20′44.84″N 115°44′40.43″E / 5.3457889°N 115.7445639°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி பிரிவு |
மாவட்டம் | பியூபோர்ட் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 12,742 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 89800 |
மலேசியத் தொலைபேசி | +6-087 |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SB |
பியூபோர்ட் என்பது (மலாய்: Pekan Beaufort; ஆங்கிலம்: Beaufort Town; சீனம்: 博福特) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, பியூபோர்ட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1]
இந்த நகரத்திற்கு முன்னாள் பிரித்தானிய ஆளுநர் லெய்செஸ்டர் பால் பியூபோர்ட் (Leicester Paul Beaufort) என்பவரின் பெயர் வைக்கப்பட்டது.
பொது
[தொகு]பியூபோர்ட் நகரத்தில் பாயும் படாஸ் ஆற்றில் அவ்வப்போது வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அதைத் தவிர்ப்பதற்காக, சாலைகளில் உயரமாகக் கட்டப்பட்ட கடைகள் உள்ளன.[2]
பியூபோர்ட் நகரத்தில் பிசாயா (Bisaya), புரூணை மலாய்க்காரர்கள், கடாசான் (Kadazan); டூசுன் (Dusun); லுன் பவாங் (Lun Bawang); லுன் டாயே (Lun Dayeh); மூருட் (Murut) மற்றும் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) வாழ்கிறார்கள். இவர்களில் பிசாயா பூர்வீக இனத்தவர்தான் அதிகமாக உள்ளார்கள்.[3]
சபாவில் உள்ள மற்ற நகரங்களான கோத்தா கினபாலு; பெனாம்பாங்; தாவாவ்; பாப்பார்; கூடாட் மற்றும் தெனோம் போன்ற நகரங்களைப் போலவே, பியூபோர்ட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்து சீன ஹக்கா மக்கள் மிகையாக வாழ்கின்றனர்.[4]
வரலாறு
[தொகு]சபாவின் உள்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக பியூபோர்ட் நகரம் முதலில் அமைக்கப்பட்டது. அந்த வகையில் பியூபோர்ட்டின் தொடக்கக் காலச் செழிப்பு ரப்பர் உற்பத்தியுடன் நெருக்கமாக இணைந்து உள்ளது.
1945-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் படைகளுக்கும் மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுக்கும் இடையே இந்த நகரில்தான் கடுமையான போர் நடந்தது.
மேற்கோள்
[தொகு]- ↑ "Beaufort is situated in the interior division of Sabah's West Coast". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ "Floods displace 43 people in Beaufort, Sabah". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ "Beaufort Sabah is located about 90km south of Kota Kinabalu. Its population consists mainly of Bisayas, Brunei Malays, Kadazan-Dusuns, Lun Bawang/Lun Dayeh, Muruts and Hakka Chinese". Borneo Travel. 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
- ↑ "Majlis Daerah Beaufort bermula pada 01 Januari, 1958 di bawah ˜Municipal and Urban Authorities Ordinance, 1954". mdbeaufort.sabah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
மேலும் காண்க
[தொகு]- இணையத்தளம்: https://mdbeaufort.sabah.gov.my/