பத்ம பூசண்
Appearance
பத்ம பூசண் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | தேசிய விருது | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 1270 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
விருது தரவரிசை | ||
பத்ம விபூசண் ← பத்ம பூசண் → பத்மசிறீ |
பத்ம பூசண் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு குடியியல் விருது (Civilian Award) ஆகும். இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு வரை, 1270 பேர் பத்ம பூசண் விருதைப் பெற்றுள்ளனர்.