நாமநாராயணி
Appearance
நாமநாராயணி கருநாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.
- இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய வகுளாபரணம் இதன் நேர் சுத்த மத்திம மேளம் ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
ஜன்ய இராகங்கள்
[தொகு]நாமநாராயணியின் ஜன்ய இராகங்கள் இவை.