தர்ப்பணம்
இந்து சமயத்தில் இறந்த முன்னோர்களை திருப்தி செய்விப்பதற்காக, அவர்தம் ஆண் வாரிசுகள், அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திப்படுத்தப்படுகிறது. பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிறது.[1] இச்சடங்கை நீர் நிலைகளில் புரோகிதர்கள் மந்திரங்கள் ஒலிக்க இச்சடங்கு செய்யப்படும். இந்நாட்களில் நீத்தாரை நினைத்து வீட்டில் எள்ளும், தண்ணீரும் இரைப்பது, காகத்திற்கு சாதம் வைப்பது, முன்னோர்களுக்கு தனி இலையில் படையல் போடுவது, பசு மாட்டிற்கு அகத்திகீரை அல்லது பச்சரிசியில் எள் மற்றும் வெல்லம் மற்றும் தானம் வழங்குவது ஆகியவை தர்ப்பணம் நாளன்று செய்ய வேண்டியதாகும்.
மாதந்தோறும் தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் ஒன்றில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.