உள்ளடக்கத்துக்குச் செல்

இராசேந்திரப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசேந்திரப்பட்டிணம் என்ற ஊர், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ளது. இந்த ஊருக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. பழங்காலத்தில் இந்த ஊர் புகழ்மிக்க ஊராகவும், வரலாற்று சிறப்பு பெற்ற ஊராகவும் விளங்கியிருக்கின்றது. இதற்கு தக்க ஆதாரங்கள் தற்காலத்திலும் இவ்வூரில் காண கிடைக்கின்றன.[1][2][3]

இராசேந்திரப்பட்டினத்தில் சுமார் 3000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு உழவுத்தொழில் சிறப்பாக நடைபெறுகின்றது. நெல்லும், கரும்பும் முக்கிய பயிர்களாக உள்ளன. இராசேந்திரப்பட்டிணம் சின்னாத்துக்குறிச்சி, சாத்தமங்கலத்தின் ஒரு பகுதி ஆகிய ஊர்கள் அடங்கிய ஒரு ஊராட்சியாக இருக்கின்றது.

ஊரின் சிறப்புகள்

[தொகு]

இராசேந்திரப்பட்டிணம் பௌத்தம் மற்றும் சைவம் ஆகிய மதங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செழித்து விளங்கிய ஊராக இருந்திருக்கின்றது. இதற்கு தற்போது காணக்கிடைக்கும் வரலாற்று எச்சங்களே தக்கச்சான்றுகளாகும். ஊரின் சேரிவாழ் மக்கள் வசித்துவருகின்ற வாழ்விடத்திற்கு அருகில் 3 இடங்களில் மகா புத்தபகவானுடைய கற்சிலைகள் இருக்கின்றன. அதில் ஒரு சிலை எந்தவித சிறு சேதாரமும் இல்லாமல் முழு சிலயாக இருப்பது மிக வியப்பாக இருக்கின்றது. இந்த சிலைகள் குறித்து பல்வேறு பெளத்த அறிஞர்கள் ஆய்வுசெய்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடக்கூடிய செய்தியாகும்.

இந்த ஊரின் மைய பகுதியில் சிறப்பான சிற்பவேலைபாடுகளுடன்கூடிய சிவன் கோயில் உள்ளது.இந்த கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சோழமன்னன் இராசேந்திரச்சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே இவ்வூருக்கு இராசேந்திரப்பட்டினம் என்ற பெயர் உண்டானது என்பர். இவ்வூரில் நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்துள்ளார். இத்திருக்கோயில் புகழ்பெற்ற திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயிலில் திருக்குமர சுவாமியும் உடனுறை வீராமுலையம்மனும் எழுந்தருளி ஊர்மக்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.

இந்த ஆலயம் திருக்குமரசுவாமி ஆலயம் என்று அழக்கப்பெருகின்றது. இங்கு தலவிருச்சமாக வெள்ளெருக்கு உள்ளது. இதன் காரணமாக இவ்வூரை திருஎருக்கத்தம்புலியூர் என்றும் அழைப்பார்கள். இந்த திருக்கோயிலின் வரலாற்றை நோக்குகின்றபோது இவ்வூர் திருக்குமரேஸ்வரம் என்ற சிறப்பு பெயரையும் பெற்று விளங்கியிருக்கின்றது.[4]

சான்றுகள்

[தொகு]

வார்ப்புரு:Https://www.google.com/maps/d/viewer?mid=z8qFmkb9KzvA.kCMdXjvq3Rds https://ta.wikipedia.org/s/4v4a


Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajendirapattinam, Virudhachalam, Cuddalore, Tamil Nadu, India - Geolysis Local". geolysis.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  2. "Rajendirapattinam, Cuddalore | Village | GeoIQ". geoiq.io. பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  3. "Rajendirapattinam village in Virudhachalam taluka, Cuddalore, India". vill.co.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-01.
  4. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திரப்பட்டினம்&oldid=3768973" இலிருந்து மீள்விக்கப்பட்டது