2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XVII ஆசிய விளையாட்டுக்கள்
XVII ஆசிய விளையாட்டுக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2014 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை
நடத்திய நகரம்இஞ்சியோன், தென் கொரியா
குறிக்கோள் வசனம்பன்மயம் இங்கே ஒளிர்கிறது
நிகழ்வுகள்439 விளையாட்டுகளில் 36
துவக்க விழாசெப்டம்பர் 19
நிறைவு விழாஅக்டோபர் 4
முதன்மை அரங்கம்இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
A map of South Korea with Incheon marked in the north-west of the country.
A map of South Korea with Incheon marked in the north-west of the country.
இஞ்சியோன்
தென் கொரியாவில் இஞ்சியோன் அமைவிடம்

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, 2014 வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெற்றது.[1] ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 விளையாட்டுகளில் 439 போட்டிகள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 17, 2007 அன்று இந்தியாவின் தில்லிக்கு எதிராக இஞ்சியோன் இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையை வென்றுள்ளது. சியோல் (1986), புசான் (2002) நகரங்களை அடுத்து ஆசிய விளையாட்டுக்களை நடத்தும் தென் கொரியாவின் மூன்றாவது நகரமாகும்.

அமைப்பு[தொகு]

ஏலம்[தொகு]

2014 ஆசிய விளையாட்டுக்கள் நடத்த ஏலம்
நகரம் நாடு வாக்குகள்
இங்கியோன் தென் கொரியா தென் கொரியா 32
தில்லி இந்தியா இந்தியா 13

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இரண்டு நகரங்கள் ஏலத்தில் பங்கேற்றன; இந்தியாவின் தில்லியும் தென் கொரியாவின் இங்கியோனும் தங்கள் முறையான ஏல மனுக்களை திசம்பர் 2, 2006இல் கத்தாரின் தோகாவில் அளித்தன.[2]

இந்த மனுக்கள் மீதான வாக்கெடுப்பு ஆசிய ஒலிம்பிக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஏப்ரல் 17, 2007 அன்று குவைத்தின் குவைத்து நகரத்தில் மரியோட்டு தங்குவிடுதியில் நடந்தது. வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக இந்த விளையாட்டுக்களில் இதுவரை பதக்கம் எதுவும் வெல்லாத நாடுகளுக்கு விளையாட்டு வசதிகளையும் பயிற்சிகளையும் கூட்டும் வகையில் $20 மில்லியன் நிதி தருவதாகவும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் கட்டணமின்றி பயணச்செலவையும் தங்கு வசதிகளையும் செய்து தருவதாகவும் சமர்ப்பித்தது.[3][4] யாருமறியா வண்ணம் அனைத்து 45 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் இங்கியோன் வென்றது.[5] வாக்கு எண்ணிக்கைகள் அலுவல்முறையாக அறிவிக்கப்படாவிடினும் இங்கியோன் 32–13 வாக்குகளில் வென்றதாக தகவல் வெளியானது.[6]

அப்போதைய இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர், தில்லி இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.[7] இவரது கருத்துக்களே தில்லி ஏலத்தில் தோற்றதற்கான முதன்மைக் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கூறினார்.[8] தில்லியின் மாசுநிலையும் போக்குவரத்து நெரிசலும் பிற காரணங்களாக அமைந்தன.[9] இங்கியோனின் கடைசிநேர நிதி உதவியும் இத்தோல்விக்கு காரணமாக அமைந்தது.[3]

நிகழிடங்கள்[தொகு]

மொத்தம் 49 போட்டிக்கான அரங்கங்களும் 48 பயிற்சிக்கான மையங்களும் இந்தப் போட்டிகளின்போது பயன்படுத்தப்படும். 49 போட்டிக்கான நிகழிடங்களில் 10 நிகழிடங்கள் இக்யாங்கி மாநிலத்தின் ஆறு நகரங்களில் நடக்க உள்ளன; மேலும் இரு நிகழிடங்கள் சுங்ஜூவிலும் சியோலிலும் உள்ளன. ஏனைய போட்டி நிகழிடங்கள் இங்கியோன் பெருநகரப் பகுதியின் எட்டு மாவட்டங்களிலும் ஓர் கவுன்ட்டியிலும் அமைந்துள்ளன. பத்து விளையாட்டரங்கங்கள் இந்தப் போட்டிகளுக்காகவே கட்டப்பட்டவை.[10] தவிரவும் 3,300 அலகுகளுடன் போட்டியாளர்களுக்கும் 9,560 அலகுகளுடன் ஊடகவியலாளர்களுக்கும் குடியிருப்புகள் கட்டப்பட்டன.[10]

முதன்மை விளையாட்டரங்கமான இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் 61,074 இருக்கைகள் கொண்டது; இப்போட்டிகளுக்குப் பிறகு இதன் கொள்ளளவு 30,000 இருக்கைகளாகக் குறைக்கப்படும்.[11] அமெரிக்க டாலர்கள் 400 மில்லியன் கட்டப்பட்டுள்ள இந்த விளையாட்டரங்கை பாபுலசு நிறுவனம் வடிவமைத்துள்ளது.[12]

தீச்சுடர் தொடரோட்டம்[தொகு]

இந்தப் போட்டிகளுக்கான தீச்சுடர் வடிவமைப்பு அக்டோபர் 2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பின் நோக்குரு, இஞ்சியோன் பெருநகரத்தின் அலுவல்முறை பறவையான கொக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது; நீலநிற உட்கலன் வான்வெளியையும் கடல்வெளியையும் குறிப்பிடுகிறது. மற்ற நான்கு வண்ணங்கள் (பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதா) ஆசியாவின் ஐந்து வலயங்களைக் குறிப்பதாக உள்ளது.[13]

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தீச்சுடர் 1954இல் இந்தப் போட்டிகள் துவங்கிய புது தில்லியின் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் ஆகத்து 9, 2014 அன்று ஏற்றப்பட்டது.[14]

தென் கொரியாவில் தீச்சுடர் ஏற்றும் விழா ஆகத்து 12, 2014இல் கங்க்ங்வா தீவிலுள்ள இஞ்சியோன் நகரத்தின் மனிசன் பகுதியில் நடந்தது.[15] ஆகத்து 13இல் துவங்கிய தீச்சுடர் தொடரோட்டம் துவக்க விழா வரை 5,700 கிமீ தொலைவிற்கு பயணித்து இந்நாட்டின் 70 நகரங்களையும் சென்றடையும்.[16]

பங்கேற்கும் நாடுகள்[தொகு]

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து தேசிய ஒலிம்பிக் குழுக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன; ஒவ்வொரு நாட்டின் சார்பாகவும் பங்கேற்கும் அணியின் போட்டியாளர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்படும்.

போட்டிகளின் நிரல்[தொகு]

 து.வி  துவக்க விழா  ●   போட்டி நிகழ்வுகள்  1  இறுதிப் போட்டிகள்  நி.வி  நிறைவு விழா
செப்டம்பர்/அக்டோபர் 2014 14வது
ஞா
15வது
திங்
16வது
செவ்
17வது
புத
18வது
வியா
19வது
வெள்
20வது
சனி
21வது
ஞாயி
22வது
திங்
23வது
செவ்
24வது
புத
25வது
வியா
26வது
வெள்
27வது
சனி
28வது
ஞாயி
29வது
திங்
30வது
செவ்
1வது
புத
2வது
வியா
3வது
வெள்
4வது
சனி
தங்கப்
பதக்கங்கள்
Diving pictogram.svg நீர் விளையாட்டுக்கள் – பாய்தல் 2 2 2 2 2 10
Swimming pictogram.svg நீர் விளையாட்டுக்கள்– நீச்சல் 6 6 7 7 6 6 38
Synchronized swimming pictogram.svg நீர் விளையாட்டுக்கள் – ஒருங்கிணைந்த நீச்சல் 1 1 1 3
Water polo pictogram.svg நீர் விளையாட்டுக்கள் – நீர்ப் பந்தாட்டம் 1 1 2
Archery pictogram.svg வில்வித்தை 4 4 8
Athletics pictogram.svg தடகள விளையாட்டு 5 8 7 4 11 11 1 47
Badminton pictogram.svg இறகுப்பந்தாட்டம் 1 1 1 2 2 7
Baseball pictogram.svg அடிப்பந்தாட்டம் – அடிப்பந்தாட்டம் 1 1
Softball pictogram.svg அடிப்பந்தாட்டம் – மென்பந்தாட்டம் 1 1
Basketball pictogram.svg கூடைப்பந்தாட்டம் 1 1 2
Bowling pictogram.svg பௌலிங் 1 1 1 1 2 4 2 12
Boxing pictogram.svg குத்துச்சண்டை 3 10 13
Canoeing (slalom) pictogram.svg சிறு படகோட்டம் – நெளிவரி 2 2 4
Canoeing (flatwater) pictogram.svg சிறு படகோட்டம் – விரைவு 6 6 12
Cricket pictogram.svg துடுப்பாட்டம் 1 1 2
Cycling (BMX) pictogram.svg மிதிவண்டி – BMX 2 2
Cycling (mountain biking) pictogram.svg மிதிவண்டி – மலையேற்றம் 2 2
Cycling (road) pictogram.svg மிதிவண்டி – சாலை 2 1 1 4
Cycling (track) pictogram.svg மிதிவண்டி – தடகளம் 2 2 1 1 1 3 10
Equestrian pictogram.svg குதிரையேற்றம் 1 1 2 1 1 6
Fencing pictogram.svg வாள்வீச்சு (விளையாட்டு) 2 2 2 2 2 2 12
Football pictogram.svg காற்பந்தாட்டம் 1 1 2
Golf pictogram.svg குழிப்பந்தாட்டம் 4 4
Gymnastics (artistic) pictogram.svg சீருடற்பயிற்சிகள் – கலைநயம் 1 1 2 5 5 14
Gymnastics (rhythmic) pictogram.svg சீருடற்பயிற்சிகள் – சீரிசை 1 1 2
Gymnastics (trampoline) pictogram.svg சீருடற்பயிற்சிகள் – குதித்தெழு மெத்தை 2 2
Handball pictogram.svg எறிபந்தாட்டம் 1 1 2
Field hockey pictogram.svg வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
Judo pictogram.svg யுடோ 4 5 5 2 16
Kabaddi pictogram.svg சடுகுடு 2 2
Karate pictogram.svg கராத்தே 5 5 3 13
Modern pentathlon pictogram.svg தற்கால ஐந்திறப்போட்டி 2 2 4
Rowing pictogram.svg துடுப்பு படகோட்டம் 7 7 14
Rugby union pictogram.svg எழுவர் ரக்பி 2 2
Sailing pictogram.svg பாய்மரப் படகோட்டம் 14 14
Sepaktakraw pictogram.svg செபாக் டக்ரோ 2 2 2 6
Shooting pictogram.svg குறி பார்த்துச் சுடுதல் 4 4 4 4 4 10 6 6 2 44
Squash pictogram.svg சுவர்ப்பந்து 2 2 4
Table tennis pictogram.svg மேசைப்பந்தாட்டம் 2 3 2 7
Taekwondo pictogram.svg டைக்குவாண்டோ 4 4 4 4 16
Tennis pictogram.svg டென்னிசு – டென்னிசு 2 3 2 7
Tennis pictogram.svg டென்னிசு – மென் டென்னிசு 2 1 2 2 7
Triathlon pictogram.svg நெடுமுப்போட்டி 2 1 3
Volleyball (beach) pictogram.svg கைப்பந்தாட்டம் – கடற்கரை 1 1 2
Volleyball (indoor) pictogram.svg கைப்பந்தாட்டம் – உள்ளரங்கம் 1 1 2
Weightlifting pictogram.svg பாரம் தூக்குதல் 2 2 2 2 2 2 3 15
Wrestling pictogram.svg மற்போர் 4 4 4 4 4 20
Wushu pictogram.svg உஷு 2 2 2 2 7 15
Blank.png விழாக்கள் து.வி நி.வி
மொத்த தங்கப் பதக்கங்கள் 18 24 27 29 38 38 22 24 30 26 35 46 39 36 7 439
திரள் கூட்டல் 18 42 69 98 136 174 196 220 250 276 311 357 396 432 439
செப்டம்பர்/அக்டோபர் 2014 14வது
ஞாயி
15வது
திங்
16வது
செவ்
17வது
புத
18வது
வியா
19வது
வெள்
20வது
சனி
21வது
ஞாயி
22வது
திங்
23வது
செவ்
24வது
புத
25வது
வியா
26வது
வெள்
27வது
சனி
28வது
ஞாயி
29வது
திங்
30வது
செவ்
1வது
புத
2வது
வியா
3வது
வெள்
4வது
சனி
தங்கப்
பதக்கங்கள்

பதக்கப் பட்டியல்[தொகு]

151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என 342 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பெற்றது. 79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் தென் கொரியா இரண்டாவது இடம் பிடித்தது. 47 தங்கம், 76 வெள்ளி, 77 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியது. 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் இந்தியா 8 வது இடத்தை பெற்றது.


   *   நடத்திய நாடு (தென் கொரியா)

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 151 108 83 342
2 தென் கொரியா} 79 71 84 234
3 ஜப்பான் 47 76 77 200
4 கசக்ஸ்தான் 28 23 33 84
5 ஈரான் 21 18 18 57
6 தாய்லாந்து 12 7 28 47
7 வடகொரியா 11 11 14 36
8 இந்தியா 11 10 36 57
9 சீன தாய்பெய் 10 18 23 51
10 கத்தார் 10 0 4 14
மொத்தம் 439 439 576 1454

மேற்சான்றுகள்[தொகு]

  1. "2014 Asian Games to promote regional harmony". The Korea Herald. 2010-06-07. http://www.koreaherald.com/national/Detail.jsp?newsMLId=20100607001600. பார்த்த நாள்: 2010-07-04. 
  2. "India makes formal bid for 2014 Asiad". oneindia. 2006-02-12. Archived from the original on 2018-12-25. https://web.archive.org/web/20181225012946/https://www.oneindia.com/in-focus/asian-games/doha-2006/0212india-bid-for-2014games.html. பார்த்த நாள்: 2010-07-04. 
  3. 3.0 3.1 "Money could decide 2014 Asian Games bid". DNA India. 2007-04-17. http://www.dnaindia.com/sport/report_money-could-decide-2014-asian-games-bid_1091337. பார்த்த நாள்: 2010-07-04. 
  4. "S Korea's Incheon wins bid to host url=http://www.cctv.com/program/sportsscene/20070418/101018.shtml". CCTV International. 2007-04-18. 
  5. "Incheon to Host url=http://www.koreatimes.co.kr/www/news/sports/sports_view.asp?newsIdx=1153&categoryCode=136". The Korea Times. 2007-04-18. 
  6. "2014 아시안게임 유치...인천도 해냈다". Naver. 2007-04-18. http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=001&oid=005&aid=0000275847&. பார்த்த நாள்: 2010-07-04. 
  7. "India vs. China as a Global Sporting Events Host". Bloomberg BusinessWeek. 2008-09-19. http://www.businessweek.com/globalbiz/content/sep2008/gb20080919_727533.htm?chan=top+news_top+news+index+-+temp_global+business. பார்த்த நாள்: 2010-07-04. 
  8. "Delhi loses bid to host url=http://news.outlookindia.com/item.aspx?466021". Outlook India. 2007-04-17. 
  9. "Pollution, traffic could have cost Delhi the Asian Games". Zee News. 2007-04-18. http://www.zeenews.com/news366535.html. பார்த்த நாள்: 2010-04-07. 
  10. 10.0 10.1 Sun-Hyoung, Kim (10 January 2010). "2014 Incheon Asian Games Brief". IAGOC. Archived from the original on 21 ஏப்ரல் 2014. https://web.archive.org/web/20140421063945/http://www.incheon2014ag.org/news/asiadNews/image/view. பார்த்த நாள்: 20 April 2014. 
  11. "Incheon Asiad Main Stadium". IAGOC. Incheon2014ag.org. 20 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  12. "2014 premiere in Korea for Populous". World Architecture News. 2009-05-06. Archived from the original on 2010-05-28. https://web.archive.org/web/20100528101538/http://www.worldarchitecturenews.com/index.php?fuseaction=wanappln.projectview&upload_id=11565. பார்த்த நாள்: 2010-07-04. 
  13. Sun-Hyoung, Kim (14 October 2013). "2014 AG Torch Designs Are Revealed". IAGOC. Archived from the original on 17 ஏப்ரல் 2014. https://archive.is/20140417135816/http://www.incheon2014ag.org/news/press/release/standard/view?menuId=3&bbsId=4663&cnId=6036&rows=28&pageNo=2&searchOpt=&searchTxt=. பார்த்த நாள்: 27 March 2014. 
  14. Das, Suprita (9 August 2014). "Asian Games Returns to its Roots for Torch Relay". NDTV. Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. https://web.archive.org/web/20140812053307/http://sports.ndtv.com/othersports/news/228053-asian-games-returns-to-its-roots-for-torch-relay. பார்த்த நாள்: 12 August 2014. 
  15. "Asian Games torch lit in host city Incheon". The Korean Herald. 12 August 2014. http://www.koreaherald.com/view.php?ud=20140812000987. பார்த்த நாள்: 12 August 2014. 
  16. You, Anna (11 August 2014). "The Torch of the Incheon Asian Games lights in New Delhi". IAGOC (Incheon2014ag.org). Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. https://archive.is/20140812135920/http://www.incheon2014ag.org/news/press/release/standard/view?menuId=3&bbsId=4663&cnId=7792&rows=1&pageNo=1&searchOpt=&searchTxt=. பார்த்த நாள்: 12 August 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]