உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர்ப்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவர்ப்பந்து
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புWorld Squash Federation
முதலில் விளையாடியதுc. 1830
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள்Yes
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
அணி உறுப்பினர்கள்Singles or doubles
பகுப்பு/வகைRacquet sport
கருவிகள்சுவர்ப்பந்து, squash racquet
விளையாடுமிடம்Indoor or outdoor (with glass court)
தற்போதைய நிலை
தாயகம்Worldwide
ஒலிம்பிக்No, but is recognized as a possible future Olympic sport

சுவர்ப்பந்து (Squash) என்பது ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண்டும்.[1][2][3]

ஆடும் முறை

[தொகு]
சுவர்ப்பந்து மட்டையும் பந்தும்

எதிர் சுவற்றின் அடிப்பாகத்தில் 48செ.மீ. உயரத்திற்கு "போர்ட்" (Board) எனப்படும் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர் சுவரில் முதலில் பட்ட பின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிராளியை திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர் சுவற்றை நோக்கி அடிக்க வேண்டும்.

எதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ்[தெளிவுபடுத்துக] (serve) செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும், இல்லாவிட்டால் எதிராளிக்கு அடுத்த சர்வ்[தெளிவுபடுத்துக] வழங்கப்படும்.

ஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஒரு போட்டியின் வெற்றி / தோல்வி, மூன்று அல்லது ஐந்து ஆட்டங்களைக் கொண்டு முடிவு செய்யப்படும்.

பந்து

[தொகு]

பந்து 40 – 41 மில்லிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப்புள்ளியைக் கொண்டு அறியலாம். புதிதாக ஆடுபவர்கள் வேகப் பந்துகளை பயன்படுத்துவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் ஒளிரும் பந்துகளை பயன்படுத்துவதுண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 2020-08-23. பார்க்கப்பட்ட நாள் 2019-07-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Squash confirmed for LA28 Olympic Games". 16 October 2023.
  3. Zug, James. "History of Squash". US Squash. Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 17 January 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ப்பந்து&oldid=4098997" இலிருந்து மீள்விக்கப்பட்டது