சுங்ஜூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்ஜூ
충주시
நகராட்சி
Korean transcription(s)
 • Hangul
 • Hanja
 • Revised RomanizationChungju-si
 • McCune-ReischauerCh'ungju-si
தென் கொரியாவில் அமைவிடம்
தென் கொரியாவில் அமைவிடம்
நாடு தென் கொரியா
வலயம்ஓசெயோ
நிர்வாகப் பிரிவுகள்1 eup, 12 myeon, 12 dong
பரப்பளவு
 • மொத்தம்153.45 km2 (59.25 sq mi)
மக்கள்தொகை (நவம்பர் 2010)
 • மொத்தம்218,098

சுங்ஜூ (Chungju) தென் கொரியாவின் வடக்கு சுங்செயோங் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்த நகரத்தின் புறநகரில் நாம்சன் மலை உள்ளது.

அக்டோபரில் இங்கு நடக்கும் வருடாந்திர தற்காப்புக் கலைவிழாவிற்காக சுங்ஜூ புகழ்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர், பான் கி மூன் இங்குதான் தமது இளமைக் காலத்தில் வாழ்ந்திருந்தார்[1].

சின்னங்கள்[தொகு]

  • நகரத்தின் மலர் : சிவந்தி
  • நகரத்தின் பறவை : மண்டாரின் வாத்து
  • நகரத்தின் மரம் : ஆப்பிள் மரம்

சுங்ஜூ ஏரி[தொகு]

சுங்ஜூ அணையும் ஏரியும்

சுங்ஜூ அணை தென்கொரியாவின் மிகப்பெரிய பன்னோக்கு அணையாகும். இது பரந்த நீர்பரப்பைக் கொண்ட செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. அருகாமையில் வொரக்சான் குன்றும் சொங்னே பள்ளத்தாக்கும் அமைந்துள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள குகைகளும் நீரூற்றுகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.[2]

2013 உலக படகுவலிப்பு போட்டிகள்[தொகு]

2013ஆம் ஆண்டுக்கான உலக படகுவலிப்பு போட்டிகள் சுங்ஜூவின் டான்ஜியம் ஏரியில் ஆகத்து 25 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெற்றன.[3]

விளைபொருட்கள்[தொகு]

சுங்ஜூ இங்கு விளையும் ஆப்பிள் பழங்களுக்கு புகழ் பெற்றது. நீண்ட பகல்நேர சூரிய ஒளியும் வெப்பநிலை மாற்றங்களும் ஆப்பிள் மரங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆப்பிள் மரங்கள் நடப்பட்டன. 1912இலிருந்து அலுவல்முறையாக இங்கு பயிரிடப்படுகின்றது.[4]

கல்வி[தொகு]

சுங்ஜூவில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன: கொங்குக் பல்கலைக்கழகம், சுங்ஜூ பல்கலைக்கழகம். இவற்றைத் தவிர பல இளநிலை, இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகள் இங்குள்ளன.

வானிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சுங்ஜூ (1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 1.9
(35.4)
5.1
(41.2)
11.4
(52.5)
19.4
(66.9)
24.0
(75.2)
27.6
(81.7)
29.6
(85.3)
30.2
(86.4)
25.8
(78.4)
20.0
(68)
12.1
(53.8)
5.0
(41)
17.7
(63.9)
தினசரி சராசரி °C (°F) -4.2
(24.4)
-1.3
(29.7)
4.7
(40.5)
11.7
(53.1)
17.1
(62.8)
21.7
(71.1)
24.7
(76.5)
24.9
(76.8)
19.3
(66.7)
12.4
(54.3)
5.3
(41.5)
-1.0
(30.2)
11.2
(52.2)
தாழ் சராசரி °C (°F) -9.5
(14.9)
-6.8
(19.8)
-1.2
(29.8)
4.4
(39.9)
10.7
(51.3)
16.4
(61.5)
20.7
(69.3)
20.8
(69.4)
14.6
(58.3)
6.8
(44.2)
-0.1
(31.8)
-6.0
(21.2)
5.9
(42.6)
பொழிவு mm (inches) 21.2
(0.835)
23.2
(0.913)
44.9
(1.768)
63.1
(2.484)
88.7
(3.492)
134.7
(5.303)
293.5
(11.555)
268.6
(10.575)
148.9
(5.862)
57.5
(2.264)
47.2
(1.858)
21.1
(0.831)
1,212.7
(47.744)
ஈரப்பதம் 72.9 69.0 65.7 60.4 64.3 70.4 77.4 78.5 78.4 76.2 75.2 74.9 71.9
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 7.1 6.7 8.1 7.9 8.7 9.4 14.8 14.1 8.6 6.4 8.1 7.2 107.1
சூரியஒளி நேரம் 168.7 175.6 203.0 233.0 242.9 219.9 178.7 197.2 188.7 193.5 152.7 156.5 2,310.3
ஆதாரம்: கொரிய வானிலைமைய நிர்வாகம்[5]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுங்ஜூ
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்ஜூ&oldid=3245196" இருந்து மீள்விக்கப்பட்டது