எழுவர் ரக்பி
![]() | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | பன்னாட்டு ரக்பி வாரியம் |
---|---|
பிற பெயர்கள் | இசுக்காட்டிசு பார்டர்சு விளையாட்டு[1], இசுக்காட்டிசு விளையாட்டு[1], குறும் விளையாட்டு ("Short Game"), அணிக்கெழுவர், எழுவர், 7கள் அல்லது VIIகள். |
முதலில் விளையாடியது | 1883 |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | முழு உடல்தொடர்பு |
அணி உறுப்பினர்கள் | ஏழு |
இருபாலரும் | தனிப் போட்டிகள் |
பகுப்பு/வகை | அணி விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு, ரக்பி யூனியன் போன்றது |
கருவிகள் | ரக்பிபந்து |
தற்போதைய நிலை | |
ஒலிம்பிக் | 2009இல் அனுமதிக்கப்பட்டது, 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இடம் பெறும் |
எழுவர் ரக்பி (Rugby sevens), மற்றும் அணிக்கெழுவர் VIIகள்,என்றெல்லாம் அழைக்கப்படும் விளையாட்டு ரக்பி கால்பந்தின் ஓர் தோன்றலாகும். குறுக்கப்பட்ட இவ்விளையாட்டில் வழமையான பதினைந்து நபர் அணிகளுக்கு மாற்றாக எழுவர் மட்டுமே விளையாடுவர்.இந்த விளையாட்டு உருவான ஸ்காட்லாந்தில் உள்ள மெல்ரோஸ் என்ற இடத்தில் இன்னமும் ஆண்டுதோறும் மெல்ரோஸ் செவன்சு என்ற பெயரில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பலநிலைகளிலும் விளையாடப்படும் இவ்விளையாட்டு வேனில் மாதங்களில் மிகப் பரவலாக விளையாடப்படுகிறது. ஆபிரிக்கா,ஆசியா,ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தென்பசிபிக் நாடுகளில் இது மிக விரும்பி ஆடப்படுகிறது.[2]
குறிப்பிடத்தக்க பன்னாட்டு போட்டிகளாக பன்னாட்டு ரக்பி வாரிய எழுவர் உலகத் தொடர் (IRB Sevens World Series)மற்றும் ரக்பி உலகக்கோப்பை எழுவர்(Rugby World Cup Sevens)விளங்குகின்றன. மேலும் பல்துறை விளையாட்டுப் போட்டிகளான பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்றவற்றில் விளையாடப்படுகிறது. பொதுநலவாய விளையாட்டுக்களில் மூன்றுமுறை (1998 - கோலாலம்பூர், மலேசியா, 2002 -மான்செஸ்டர் , இங்கிலாந்து மற்றும் 2006 - மெல்பேர்ண், ஆத்திரேலியா), விளையாடப்பட்டதில் மூன்று முறையும் தங்கப்பதக்கத்தை நியூசிலாந்து அணியே வென்றுள்ளது.
எழுவர் ரக்பி தற்போது வேனில் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் ஓர் அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடப்படும்.[3]
மேற்கோள்கள்[தொகு]
பதிக்கப்பட்டவை[தொகு]
- Bath, Richard (ed.) The Complete Book of Rugby (Seven Oaks Ltd, 1997 ISBN 1-86200-013-3 பிழையான ISBN)
- Bath, Richard (ed.) The Scotland Rugby Miscellany (Vision Sports Publishing Ltd, 2007 ISBN 1905326246)
- Jones, J.R. Encyclopedia of Rugby Union Football (Robert Hale, London, 1976 ISBN 0709153945)
- McLaren, Bill Talking of Rugby (1991, Stanley Paul, London ISBN 0-09-173875-X)
- Massie, Allan A Portrait of Scottish Rugby (Polygon, Edinburgh; ISBN 0-904919-84-6)
- Richards, Huw (2007). A Game for Hooligans: The History of Rugby Union. Edinburgh: Mainstream Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1845962555. https://archive.org/details/gameforhooligans0000rich.
- Starmer-Smith, Nigel (ed) Rugby - A Way of Life, An Illustrated History of Rugby (Lennard Books, 1986 ISBN 0-7126-2662-X)
- Stubbs, Ray (2009). The Sports Book. Dorling Kindersley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1405336970.
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Bath, The Complete Book of Rugby, p29
- ↑ The Spread of the Sevens பரணிடப்பட்டது 2011-07-14 at the வந்தவழி இயந்திரம், Melrose Sevens official site, retrieved 25th February, 2010
- ↑ "Rugby sevens and golf get Olympic spot in 2016". BBC. 2009-08-13. http://news.bbc.co.uk/sport1/hi/olympic_games/8292584.stm. பார்த்த நாள்: 2009-10-09.
வெளியிணைப்புகள்[தொகு]
- பன்னாட்டு ரக்பி வாரியம் வலைத்தளம்
- ரக்பி வழிகாட்டி- ஏழுகளுக்குப் பயிற்றுவித்தல் பரணிடப்பட்டது 2009-01-27 at the வந்தவழி இயந்திரம்
- அல்டிமேட் ரக்பி செவன்ஸ்
- எழுவர் ரக்பி - வரலாறு & போட்டிகள்
- எழுவர் ரக்பி விளையாடவும் பயிற்றுவிக்கவும் வழிகாட்டவும் துணைநூல் பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம்
- 2009 நடுவர்களுக்கான எழுவர் ரக்பி கைப்புத்தகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- அணிக்கெழுவர் ரக்பி குறித்தான ஓர் குறும் வரலாறு பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்
- மெல்ரோசு எழுவர் போட்டிகள்