1770
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1770 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1770 MDCCLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1801 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2523 |
அர்மீனிய நாட்காட்டி | 1219 ԹՎ ՌՄԺԹ |
சீன நாட்காட்டி | 4466-4467 |
எபிரேய நாட்காட்டி | 5529-5530 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1825-1826 1692-1693 4871-4872 |
இரானிய நாட்காட்டி | 1148-1149 |
இசுலாமிய நாட்காட்டி | 1183 – 1184 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 7 (明和7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2020 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4103 |
1770 (MDCCLXX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 5 - பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் ஐந்து அமெரிக்கர்கள் பிரித்தானியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 19 - "எண்டெவர்" கப்பலில் சென்ற பிரித்தானிய நாடுகாண் பயணி காப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
- மே 16 - பாரிசில் அரச திருமண வைபவம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தினாஅல் 132 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 1 - லேக்செல் வால்வெள்ளி பூமியைக் கடந்து சென்றது.
- ஜூலை 5 - செஸ்மா, லார்கா என்ற இடங்களில் இடம்பெற்ற போர்களில் ரஷ்யப் பேரரசு, ஒட்டோமான் பேரரசை வென்றது.
- ஆகஸ்ட் 22 - ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் புதிய ஒல்லாந்து என்ற இடத்தை பிரித்தானியாவுக்கு உரிமை கோரினான்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்சி நான்கு வர்க்கத் தேற்றத்தை நிறுவினார்.
- தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் கொண்ட ஒரு தானுந்தை பிரெஞ்சு கப்டன் "நிக்கொலாசு சோசப்பு க்யூனொ" ஓட்டிக்காட்டினார்.
பிறப்புக்கள்
[தொகு]- ஆகஸ்ட் 27 - ஹெகல், ஜெர்மன் மெய்யியல் அறிஞர் (இ. 1831)
- டிசம்பர் 16 - லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய இசை இயற்றுநர் (இ. 1827)