பாஸ்டன் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல்

பாஸ்டன் படுகொலை (Boston Massacre) மார்ச் 5, 1770இல் பாஸ்டன் நகரில் பிரித்தானிய படையினர்களால் நடத்தப்பட்ட படுகொலையைக் குறிக்கும்.

1767இல் பிரித்தானிய அரசு, மக்கள் விரும்பாத பல புதிய வரிகளை அமெரிக்காவில் விதித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரித்தானிய அரசு படையினரை பாஸ்டனுக்கு அனுப்பியது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.

மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரித்தானிய படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளர்ந்து படையினர்கள் கூட்டத்தின் மீது கைத்துப்பாக்கிகளால் சுட்டதில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டன்_படுகொலை&oldid=2669674" இலிருந்து மீள்விக்கப்பட்டது