வில்லூண்டி தீர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லூன்றித் தீர்த்தக் கிணறு

வில்லூன்றி தீர்த்தம் அல்லது வில்லூண்டித் தீர்த்தம், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம் வட்டத்தில் தங்கச்சிமடம் எனுமிடத்தில், வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த புனித தீர்த்த கிணறு ஆகும். இராவணனுடன் போரிட்டு சீதையுடன் இராமேஸ்வரம் திரும்பிய ராமனுடன் சென்று கொண்டிருந்த சீதாபிராட்டிக்கு இராமன் தன் கையிலிருந்த வில்லை ஊன்றி அதிலிருந்து பீறிட்ட நீரைக் கொண்டு தாகத்தைக் தணித்துள்ளான். இதனால் இந்த இடத்துக்கு வில்லூண்டித் தீர்த்தம் என்று பெயராயிற்று. இவ்விடம் இராமேசுவரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், தங்கச்சிமடத்திலிருந்து இரண்டு கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]