பாரிபா பகுஜன் மகாசங்கம்
பாரிபா பகுஜன் மகாசங்கம் | |
---|---|
தலைவர் | பிரகாசு அம்பேத்கர்[1] |
தொடக்கம் | 4 July 1994[2] |
இணைந்தது | வஞ்சித் பகுஜன் அகாதி (2019) |
இளைஞர் அமைப்பு | பாரிபா பகுஜன் கூட்டமைப்பு[3] |
கொள்கை | தலீத்தியம் மதச்சார்பற்ற |
அரசியல் நிலைப்பாடு | மைய, இடது |
நிறங்கள் | நீலம் |
இணையதளம் | |
www | |
இந்தியா அரசியல் |
பாரிபா பகுஜன் மகாசங்கம் (Pharipa Bahujan Mahasaangha) என்பது பிரகாசு அம்பேத்கரால் 4 சூலை,1994 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி இந்தியக் குடியரசுக் கட்சியின் பிளவுபட்ட குழுவாக இருந்தது. மேலும் அம்பேத்கர் தலைமையிலான பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் தன் வேர்களைக் கொண்டிருந்தது. கட்சியின் தலைவர் பிரகாசு அம்பேத்கர் ஆவார். கட்சியின் முழு பெயர் பாரதிய குடியரசுக் கட்சி-பகுஜன் மகாசங்கம் (இந்தியக் குடியரசுக் கட்சி). இக்கட்சி மகாராட்டிராவை அடிப்படையாகக் கொண்டது.[4] 2019ஆம் ஆண்டில், பிரகாசு அம்பேத்கரால் நிறுவப்பட்ட புதிய அரசியல் கட்சியான வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைந்தது.[5][6]
வரலாறு
[தொகு]இந்தியக் குடியரசுக் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்தக் கட்சி 1994 சூலை 4 அன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு பி. ஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாசு யசுவந்த் அம்பேத்கர் தலைமை தாங்கினார்.
1999 மகாராட்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி 34 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது மக்களவைத் தேர்தலில் அம்பேத்கர் அகோலா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
2004 மக்களவைத் தேர்தலில் கட்சி தனது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இக்கட்சி இழந்தது. மொத்தம் 16 வேட்பாளர்களைக் கட்சி அறிவித்தது, அனைவரும் மகாராட்டிராவினைச் சேர்ந்தவர்கள். அகோலாவில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரால் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். இத்தேர்தலில் மொத்தம் 606,827 வாக்குகளைப் பெற்று மூன்று இடங்களை வென்றது.
2014 மகாராட்டிராச் சட்டப்பேரவைத் தேர்தலில் பலிராம் சிர்சுகர் அகோலாவின் பாலாப்பூர் தொகுதியில் பாரிபா பகுஜன் மகாசங்கம் சார்பில் போட்டியிட்டு 6939 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[8][9]
20 மார்ச் 2018 அன்று, பிரகாசு அம்பேத்கர் வஞ்சித் பகுஜன் அகாதி என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவினார். 2019 மார்ச் 14 அன்று, பாரிபா பகுஜன் மகாசங் வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைக்கப்படும் என்று அம்பேத்கர் அறிவித்தார். பாரிபா-பகுஜான் மகாசங்கத்தின் வெற்றியின் மூலம் சமூக பொறியியலின் 'அகோலா முறை' இருந்தபோதிலும், 'பாரிபா' என்ற சொல் கட்சியின் விரிவாக்கத்தினை மட்டுப்படுத்தியதாக அவர் கூறினார். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாரிபா பகுஜன் மகாசங்கம் வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைக்கப்படும் என்றும், வஞ்சித் பகுஜன் அகாதி பரந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் அறிவித்தார்.[10][11][12][13] 2019 நவம்பர் 8 அன்று, பாரிபா பகுஜன் மகாசங்கா வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைந்தது.[14]
தேர்தல் செயல்பாடு
[தொகு]மக்களவைத் தேர்தல்
[தொகு]மக்களவை | இந்திய பொதுத் தேர்தல் |
போட்டியிட்ட இடங்கள் |
வென்ற இடங்கள் | வாக்குகள் | கட்சி வாக்குகள்% | மாநிலம் (இருக்கைகள்) |
---|---|---|---|---|---|---|
11வது மக்களவை | 1996 | 4 | 0 | 3,29,695 | 1.2 | மஹாராஷ்டிரா (0) |
13வது மக்களவை | 1999 | 4 | 1 | 5,92,559 | 2.1 | மஹாராஷ்டிரா (1) |
14வது மக்களவை | 2004 | 16 | 0 | 4,28,566 | 1.3 | மஹாராஷ்டிரா (0) |
15வது மக்களவை | 2009 | 39 | 0 | 4,92,470 | 1.3 | மஹாராஷ்டிரா (0) |
16வது மக்களவை | 2014 | 23 | 0 | 3,60,854 | 0.7% | மஹாராஷ்டிரா (0) |
மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்
[தொகு]சட்டசபை | பொதுத் தேர்தல் ஆண்டு |
போட்டியிட்ட இடங்கள் |
வென்ற இடங்கள் |
கட்சி வாக்குகள் | கட்சி வாக்குகள்% |
---|---|---|---|---|---|
10வது சட்டமன்றம் | 1999 | 34 | 3 | 6,06,827 | 1.8 |
11வது சட்டமன்றம் | 2004 | 83 | 1 | 5,16,221 | 1.2 |
12வது சட்டமன்றம் | 2009 | 103 | 1 | 3,76,645 | 0.8 |
13வது சட்டமன்றம் | 2014 | 70 | 1 | 4,72,925 | 0.9 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prakash Ambedkar sees major realignments coming - Times of India". 20 May 2014 இம் மூலத்தில் இருந்து 4 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190404102458/https://timesofindia.indiatimes.com/city/nagpur/Prakash-Ambedkar-sees-major-realignments-coming/articleshow/35353083.cms.
- ↑ "official site". Archived from the original on நவம்பர் 11, 2016. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 6, 2019.
- ↑ "official". Archived from the original on 2014-07-03.
- ↑ "भारिप-बहुजन महासंघ के अध्यक्ष प्रकाश अंबेडकर का नए राजनीतिक गठबंधन का ऐलान". aajtak.in (in இந்தி). 20 June 2018. Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ "अखेर भारिप-बमसं 'वंचित'मध्ये विलीन!". 9 November 2019.
- ↑ "भारिप बहुजन महासंघ का वंचित बहुजन आघाडी में विलय, Rpi का अस्तित्व समाप्त". YouTube. Archived from the original on 2021-12-22.
- ↑ "Members Bioprofile". Lok Sabha Secretariat, New Delhi website. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
- ↑ "Left Front wins in just 8 seats". DNA India. 20 October 2014. Archived from the original on 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
- ↑ "Page Not Found". eciresults.nic.in. Archived from the original on 30 April 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
{{cite web}}
: Cite uses generic title (help) - ↑ "भारिप बहुजन महासंघ निवडणुकीनंतर वंचित आघाडीत विलीन होणार: प्रकाश आंबेडकर". Loksatta (in மராத்தி). 2019-03-14. Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ अकोला, उमेश अलोणे, एबीपी माझा (2019-03-14). "भारिप बहुजन महासंघ वंचित आघाडीत विलीन करणार, प्रकाश आंबेडकरांची घोषणा". ABP Majha (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ author/online-lokmat (2019-03-14). "भारिप बहुजन महासंघ वंचित बहुजन आघाडीत विलीन करणार, प्रकाश आंबेडकरांचा मोठा निर्णय". Lokmat. Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "प्रकाश आंबेडकरांचा Big Decision..भारिप बहुजन महासंघ वंचित बहुजन आघाडीत विलीन करणार". divyamarathi (in மராத்தி). 2019-03-14. Archived from the original on 2019-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-25.
- ↑ "अखेर भारिप-बमसं 'वंचित'मध्ये विलीन!". 9 November 2019.