பிரகாசு யசுவந்த் அம்பேத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகாசு யசுவந்த் அம்பேத்கர்
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்
பதவியில்
10 அக்டோபர் 1999 (1999-10-10) – 6 பெப்ரவரி 2004 (2004-02-06)
பின்னவர்சஞ்சய் சாம்ராவ்
தொகுதிஅகோலா
பதவியில்
10 மார்ச்சு 1998 (1998-03-10) – 26 ஏப்ரல் 1999 (1999-04-26)
முன்னையவர்பாண்டுரங்க புண்டலேக் பந்த்கர்
தொகுதிஅகோலா
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
18 செப்டம்பர் 1990 (1990-09-18) – 17 செப்டம்பர் 1996 (1996-09-17)
தொகுதிமகாராட்டிரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1954 (1954-05-10) (அகவை 69)
மும்பை, மும்பை மாகாணம்]] (தற்போதைய மும்பை, மகாராட்டிரம்), இந்தியா அகோலா, மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி
துணைவர்
அஞ்சலி (தி. 1993)
உறவுகள்
பிள்ளைகள்சுஜத் அம்பேத்கர் (மகன்)
பெற்றோர்(கள்)
கல்விஇளங்கலை
இளங்கலைச் சட்டம்
முன்னாள் கல்லூரிபுனித இசுடானிசுலாசு உயர்நிலைப் பள்ளி
மும்பை, சித்தார்த் சட்டக் கல்லூரி
தொழில்வழக்குரைஞர், அரசியல்வாதி, சமூக செயல்பாட்டாளர்
இணையத்தளம்முகநூலில் PrakashAmbedkar
புனைப்பெயர்பாலாசாகேப் அம்பேத்கர்
மூலம்: [[1]]

பாலாசாகேப் அம்பேத்கர் என்று பிரபலமாக அறியப்பட்ட பிரகாசு யசுவந்த் அம்பேத்கர் (Prakash Yashwant Ambedkar) (பிறப்பு 10 மே 1954) ஒரு இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமாவார். இவர் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற அரசியல் கட்சியின் தலைவராவார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அம்பேத்கரின் பேரனான இவர், இந்தியாவின் பன்னிரெண்டாவது மற்றும் பதின்மூன்றாவது மக்களவைக்கு அகோலா தொகுதியில் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பிரகாசு அம்பேத்கர், இந்திய சட்ட அறிஞரும், முற்போக்குவாதியும், இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளருமான அம்பேத்கர் மற்றும் இரமாபாய் அம்பேத்கரின் மூத்த பேரன். அம்பேத்கரின் மகன் யசுவந்த் அம்பேத்கருக்கும் (பையாசாகேப்), அவரது மனைவி மீரா என்பவருக்கும் மகனாவார். அம்பேத்கர் குடும்பம் நவாயன பௌத்தத்தை பின்பற்றினார்கள். [2] இவருக்கு பீம்ராவ் மற்றும் ஆனந்த்ராஜ் என்ற இரண்டு இளைய சகோதரர்களும், ஆனந்த் டெல்டும்ப்டேவை மணந்த இரமாபாய் என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். பிரகாசு அம்பேத்கர் அஞ்சலி மேடியோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுஜத் அம்பேத்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார். [3]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

பிரகாசு அம்பேத்கர் 10 மே 1954 அன்று மும்பையில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் மும்பையின் புனித இசுடானிசுலாசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1978 ஆம் ஆண்டில், சித்தார்த்த கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1981 ஆம் ஆண்டில் மும்பையின் சித்தார்த் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் பட்டம் (எல்எல்பி) பெற்றார். [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சூலை 4, 1994 இல், பிரகாசு அம்பேத்கர் பாரிப்பா பகுஜன் மகாசங்கை நிறுவினார். இந்த கட்சி இந்தியக் குடியரசுக் கட்சியின் பிற பிரிவுகளில் ஒரு பிளவுபட்ட குழுவாக இருந்தது. இது இவரது தாத்தா இறந்த பிறகு அவரது கட்டளைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அகோலா நகராட்சித் தேர்தலில் பாரிப்பா பகுஜன் மகாசங்கம் இந்திய தேசிய காங்கிரசு, சிவ சேனா, பாரதிய ஜனதா கட்சி போன்ற நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கட்சியின் விரிவாக்கம் 1995-க்குப் பிறகு தொடர்ந்தது, தலித் அல்லாத கட்சிகள் மற்றும் அமைப்புகள் சில பாரிப்பா பகுஜன் மகாசங்கத்தில் இணைந்துள்ளன. [5] [6]

1990 - 1996 காலப்பகுதியில் பிரகாசு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். [7] [8] 1998 ஆம் ஆண்டு அகோலா மக்களவைத் தொகுதியிலிருந்து பன்னிரெண்டாவது மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் அதே தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக, பதின்மூன்றாவது மக்களவைத் தேர்தலுக்கான பாரிபா பகுஜன் மகாசங்கின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 2004 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார். [9] [10] [11] [12]

பிரகாசு அம்பேத்கர் 20 மார்ச் 2018 அன்று வஞ்சித் பகுஜன் அகாதி என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவினார். அதன் சித்தாந்தத்துடன் முதன்மையாக அரசியலமைப்பு, அம்பேத்கரிசம், சமய சார்பின்மை, சமூகவுடைமை மற்றும் முற்போக்குவாதம் ஆகியவற்றை வலியுறுத்தினார் . [13] [14] ஒரு வருடம் கழித்து 2019 மார்ச் 15 அன்று 2019 மக்களைவைத் தேர்தலுக்கு முன்னர், வஞ்சித் பகுஜன் அகாதியை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தார். [15] இதை கிட்டத்தட்ட 100 சிறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரிக்கின்றன. [16] [17] இவர் வஞ்சித் பகுஜன் அகாதியின் தலைவராக இருக்கிறார். [18]

2019 மக்களவைத் தேர்தலில் இவர் அகோலா ,சோலாப்பூர் ஆகிய இரு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [19] [20]

சர்ச்சை[தொகு]

இவர் தனது ஆதரவாளர்களை தன்னைப் பற்றிய எதிரான கருத்துகளுக்கு வன்முறையை நாடுமாறு கேட்டுக் கொண்டதன் மூலமும், இந்திய வான்படை பாக்கித்தானில் நடத்திய தக்குதல்களுக்கு ஆதாரம் கேட்டு வெளியிட்ட இவரது அறிக்கையை விமர்சித்தவர்களிடமும் சர்ச்சையை ஏற்படுத்தினார். பல விமர்சகர்கள் இதை போர்க்குணமிக்க தலித் அரசியல் என்று அழைத்தனர். [21] [22]

குறிப்புகள்[தொகு]

  1. "Welcome to Maharashtra Political Parties.in". www.maharashtrapoliticalparties.in. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
  2. "Vemula's mom, brother embrace Buddhism on Ambedkar Jayanti - Times of India". The Times of India. https://m.timesofindia.com/city/mumbai/Vemulas-mom-brother-embrace-Buddhism-on-Ambedkar-Jayanti/articleshow/51832628.cms. 
  3. "होम मिनिस्टर प्रा. अंजली मायदेव : महिला आघाडीची जबाबदारी". divyamarathi. https://divyamarathi.bhaskar.com/news/home-minister-prof-4574062-NOR.html. 
  4. [1]
  5. "Lok Sabha Election 2019: Vanchit Bahujan Aaghadi: New Political Power In Maharashtra | Lok Sabha Election 2019 : वंचित बहुजन आघाडी : नवी राजकीय शक्ती". Lokmat.Com. 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  6. "भारिप बहुजन महासंघ वंचित आघाडीत विलीन करणार, प्रकाश आंबेडकरांची घोषणा". Abpmajha.abplive.in. 2019-03-14. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  7. "Microsoft Word - biograp_sketc_1a.htm" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-03-02.
  8. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
  9. http://parliamentofindia.nic.in/ls/lok13/biodata/13MH19.htm
  10. "IndiaVotes PC: Winner Candidates of BBM for 1999". Indiavotes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  11. "Welcome to Maharashtra Political Parties.in". Maharashtrapoliticalparties.in. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2019-05-10.
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  13. Farooquee, Neyaz. "Asaduddin Owaisi's Dalit outreach and the relevance of Prakash Ambedkar's Vanchit Bahujan Aghadi". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  14. author/lokmat-news-network (2018-09-29). "वंचित बहुजन आघाडीने महाराष्ट्रात बदलाचे वारे!". Lokmat. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19. {{cite web}}: |last= has generic name (help)
  15. "List of Political Parties Year 2018-19". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  16. "Elections 2019 | The Big Players in Maharashtra". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  17. "Lok Sabha Elections 2019: महाराष्ट्र में कांग्रेस को झटका, प्रकाश आंबेडकर ने गठबंधन से पल्ला झाड़ा". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  18. "प्रकाश आंबेडकर के अकेले चुनाव लड़ने से बीजेपी-शिवसेना को होगा फायदा– News18 हिंदी". News18 India. 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2019-04-19.
  19. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  20. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
  21. "Bharip chief tells his men to thrash all who troll him | Mumbai News - Times of India". The Times of India.
  22. https://www.freepressjournal.in/mumbai/mumbai-prakash-ambedkar-appeals-to-party-workers-to-trash-out-trolls-against-him/1474790.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Prakash Ambedkar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.