பழனிபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பழனி பாரதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கவிஞர் பழநிபாரதி

பழநிபாரதி இந்தியத் திரைப்படத்துறையின் பாடலாசிரியர் ஆவார்.[1] திரைப்படங்களில் இவர் பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின. கவிதைநூல்கள் பலவும் எழுதி வரும் இவர் தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார். பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 60ஆவது பிறந்தநாளுக்குப் பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி என்ற பாடலை எழுதி வெளியிட்டார்.

கவிதை நூல்கள்[தொகு]

பழனி பாரதி எழுதியுள்ள கவிதை நூல்கள்.[2]

 • நெருப்புப் பார்வைகள்
 • வெளிநடப்பு
 • காதலின் பின்கதவு
 • மழைப்பெண்
 • முத்தங்களின் பழக்கூடை
 • புறாக்கள் மறைந்த இரவு
 • தனிமையில் விளையாடும் பொம்மை
 • தண்ணீரில் விழுந்த வெயில்
 • சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.ntamil.com/451 என் தமிழ் இணையம்
 2. கவிதை அழியாது; சரித்திரத்தில் புனிதமாகப் போற்றப்டுவது ஒரு கவியின் பிறப்புதான்! -திரைப்படப் பாடலாசிரியர் பழநிபாரதி நேர்காணல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிபாரதி&oldid=2827255" இருந்து மீள்விக்கப்பட்டது