பெரிய இடத்து மாப்பிள்ளை
பெரிய இடத்து மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | குரு தனபால் |
தயாரிப்பு | கே. முருகன் |
கதை | குரு தனபால் |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | முருகன் மூவிஸ் |
வெளியீடு | ஆகத்து 22, 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெரிய இடத்து மாப்பிள்ளை (periya idaththu maapillai) 1997 ஆம் ஆண்டு ஜெயராம், கவுண்டமணி, தேவயானி மற்றும் மந்த்ரா நடிப்பில் குரு தனபால் இயக்கத்தில் வெளியான திரைப்படம். கே. முருகன் தயாரிப்பில் சிற்பி இசையமைப்பில் 22 ஆகத்து 1997 இல் வெளியானது. இப்படம் மலையாளத் திரைப்படமான அனியன் பாவா சேட்டன் பாவாவின் மறு ஆக்கம் ஆகும்.
கதைச் சுருக்கம்
[தொகு]பெரியதம்பி (விஜயகுமார்) மற்றும் சின்னத்தம்பி (ராசன் பி. தேவ்) சகோதரர்கள். இவர்களிடம் வேலை செய்துவருபவர் காளி (கவுண்டமணி). பெரும் பணக்காரர்களான இவர்களிடம் வாகன ஓட்டுநராக கோபாலகிருஷ்ணன் (ஜெயராம்) வேலைக்குச் சேர்கிறான். பெரியதம்பியின் மகள் லட்சுமியும் (தேவயானி) சின்னத்தம்பியின் மகள் பிரியாவும் (மந்த்ரா) கோபாலகிருஷ்ணனைக் காதலிக்கிறார்கள். லட்சுமியைத் திருமணம் செய்யவிரும்பும் ராமு (விவேக்) அவளுக்குத் திருமணம் செய்ய குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளை சதி செய்து தடுக்கிறான்.
சின்னத்தம்பியின் மைத்துனர்களான பாண்டியன் (பாண்டியன்) மற்றும் செல்லப்பா (பொன்வண்ணன்) செய்யும் தவறுகளைக் கண்டறியும் கோபாலகிருஷ்ணன் தன் முதலாளிகளிடம் தெரிவிக்க அவர்களை வீட்டைவிட்டுத் துரத்துகிறார்கள். லட்சுமி கோபாலகிருஷ்ணனை விரும்புவதை அறிந்து அவர்களுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பெரியதம்பி. தன் மகள் பிரியாவிற்கு கோபாலகிருஷ்ணனைத் திருமணம் செய்ய நினைத்த சின்னத்தம்பி, தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி அண்ணனுடன் சண்டையிடுகிறான்.
பிரியா தன் காதலை விட்டுக்கொடுக்க லட்சுமி-கோபாலகிருஷ்ணன் திருமணம் முடிவாகிறது. பெரியதம்பி-சின்னத்தம்பி சகோதரர்களுக்கு எதிரியான மணியன் கவுண்டரின் (மணிவண்ணன்) துணையோடு பாண்டியனும் செல்லப்பாவும் திருமணத்தன்று தகராறு செய்கிறார்கள். அவர்களைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைக்கின்றனர். கோபாலகிருஷ்ணன் - லட்சுமி திருமணம் இனிதே நடக்கிறது.
நடிகர்கள்
[தொகு]- ஜெயராம் - கோபாலகிருஷ்ணன்
- கவுண்டமணி - காளி
- மணிவண்ணன் - மணியன் கவுண்டர்
- தேவயானி - லட்சுமி
- மந்த்ரா - பிரியா
- விஜயகுமார் - பெரியதம்பி
- ராசன் பி. தேவ் - சின்னத்தம்பி
- ஆர். சுந்தர்ராஜன் - கோபாலகிருஷ்ணனின் தந்தை
- பாண்டியன் - பாண்டியன்
- பொன்வண்ணன் - செல்லப்பா
- விவேக் - ராமு
- அல்வா வாசு - வாசு
- கலைஞானம் - கோபாலகிருஷ்ணனின் தாத்தா
- சொக்கலிங்க பாகவதர் - கோபாலகிருஷ்ணனின் கொள்ளுத் தாத்தா
- எல். ஐ. சி. நரசிம்மன்
- கலாரஞ்சினி - சின்னத்தம்பியின் மனைவி
- விஜய சந்திரிகா - கோபாலகிருஷ்ணனின் தாய்
- ஜானகி - கோபாலகிருஷ்ணனின் பாட்டி
- ராதாபாய் - கோபாலகிருஷ்ணனின் கொள்ளுப் பாட்டி
இசை
[தொகு]இப்படத்தின் இசையமைப்பாளர் சிற்பி. பாடலாசிரியர்கள் காளிதாசன் மற்றும் பழனிபாரதி.
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | அச்சா நமஸ்தே | மனோ | 4:05 |
2 | சிக் சிக் | மனோ, ஸ்வர்ணலதா | 4:37 |
3 | காதலின் பார்முலா | மனோ, சித்ரா | 4:38 |
4 | கண்ணே பாசம் | ஹரிஹரன் | 3:30 |