உள்ளடக்கத்துக்குச் செல்

ரமணா (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமணா (2002 திரைப்படம்)
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஆஸ்கார் V.இரவிச்சந்திரன்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
சிம்ரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்ஆஸ்கார் பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர், 2002
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரமணா (Ramana) என்பது 2002ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி விழிப்புணர்வு அதிரடி திரைப்படம். இந்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த், சிம்ரன் (முக்கியமான சிறப்புத் தோற்றத்தில்) மற்றும் ஆஷிமா பல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடிவு செய்யும் ரமணா என்ற மனிதனைப் பற்றிய படம். இத்திரைப்படம் 4 நவம்பர் 2002 அன்று வெளியிடப்பட்டது. இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்காக தேர்வு செய்யப்பட்டு 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதினைப் பெற்றது. மேலும் ஏ. ஆர். முருகதாஸ் சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். இப்படம் 2015ல் இந்தியில் மார் மித்தேங்கே 3 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் தெலுங்கில் தாகூர் எனவும் கன்னடத்தில் விஷ்ணு சேனா எனவும் வங்காள மொழியில் வார்னிங் எனவும் இந்தி மொழியில் கப்பர் இஸ்‌ பேக் என மறு உருவாக்கம் செய்யப்பட்டது.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ramana - The Almighty". British Board of Film Classification.
  2. "A Captain's knock". The Hindu. 8 May 2016 இம் மூலத்தில் இருந்து 2 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220502161644/https://www.thehindu.com/elections/tamilnadu2016/A-Captains-knock/article14308310.ece. 
  3. Rajendran, Gopinath. "'Writing a script is an art on its own'". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 2 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220502161649/https://www.newindianexpress.com/entertainment/tamil/2020/feb/17/writing-a-script-is-an-art-on-its-own-2104309.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணா_(2002_திரைப்படம்)&oldid=4102550" இலிருந்து மீள்விக்கப்பட்டது