1535
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1535 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1535 MDXXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1566 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2288 |
அர்மீனிய நாட்காட்டி | 984 ԹՎ ՋՁԴ |
சீன நாட்காட்டி | 4231-4232 |
எபிரேய நாட்காட்டி | 5294-5295 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1590-1591 1457-1458 4636-4637 |
இரானிய நாட்காட்டி | 913-914 |
இசுலாமிய நாட்காட்டி | 941 – 942 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 4 (天文4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1785 |
யூலியன் நாட்காட்டி | 1535 MDXXXV |
கொரிய நாட்காட்டி | 3868 |
1535 (MDXXXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 18 - லீமா நகரம் நிறுவப்பட்டது.
- மார்ச் 10 - பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் கலாபகசுத் தீவுகளில் தரையிறங்கியது.
- மே 19 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
- சூலை 6 - சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 2 - ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.