ஆகத்து 20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:20. Aujußß |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:އޮގަސްޓު 20 |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
[[da:20. august]] |
[[da:20. august]] |
||
[[de:20. August]] |
[[de:20. August]] |
||
[[dv:އޮގަސްޓު 20]] |
|||
[[el:20 Αυγούστου]] |
[[el:20 Αυγούστου]] |
||
[[en:August 20]] |
[[en:August 20]] |
18:56, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்டு 20 கிரிகோரியன் ஆண்டின் 232வது நாளாகும். நெட்டாண்டுகளில் 233வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 636 - அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
- 1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
- 1866 - அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
- 1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
- 1940 - மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
- 1948 - "இலங்கை குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1953 - ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 1960 - செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
- 1968 - பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
- 1975 - நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
- 1977 - நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
- 1988 - ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
- 1991 - எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
- 1997 - அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
- 2006 - நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
- 1910 - ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (இ. 1961)
- 1944 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (இ. 1991)
- 1946 - நாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
இறப்புகள்
- 1823 - பாப்பரசர் ஏழாவது பயஸ் (பி. 1740)
- 1854 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மன் மெய்யியல்லாளர் (பி. 1775)
- 1914 - பாப்பரசர் பத்தாவது பயஸ், (பி. 1835)
- 1915 - போல் ஏர்ள்ரிச், ஜேர்மன் அறிவியலாளர், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1854)
- 1917 - அடொல்ஃப் வொன் பாயெர், ஜேர்மன் வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1835)
- 1961 - பேர்சி பிறிட்ஜ்மன், அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர். (பி. 1882)