எலன் ஜான்சன் சர்லீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:29, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
எலன் ஜான்சன் சர்லீஃப்
லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவர்
பதவியில்
16 சனவரி 2006 – 22 ஜனவரி 2018
Vice Presidentஜோசஃப் போகாய்
முன்னையவர்குயூடெ பிரியண்ட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 29, 1938 (1938-10-29) (அகவை 85)
மொன்ரோவியா, லைபீரியா
அரசியல் கட்சிஒற்றுமைக் கட்சி
முன்னாள் கல்லூரிகொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்)
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
தொழில்பொருளியலாளர்
வர்த்தகர்
செயல்முனைப்பாளர்

எலன் ஜான்சன் சர்லீஃப் (Ellen Johnson Sirleaf, பிறப்பு: 29 அக்டோபர் 1938) லைபீரிய அரசியல்வாதியும் லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவராக 2006 முதல் 2018ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் ஆவார். இவரே ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசத்தலைவர் ஆவார்.

இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு தேர்தல்களில் இரண்டாவதாக வந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சனவரி 16, 2006இல் ஆபிரிக்காவின் முதலாவதும் மற்றும் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் லேமா குபோவீ மற்றும் தவக்குல் கர்மானுடன் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.[1]

12 செப்டம்பர் 2013 அன்று அமைதிக்கான "இந்திரா காந்தி அமைதிப் பரிசினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முக்கர்ஜி இவருக்கு வழங்கினார்.

மேற்கோள்கள்

  1. "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.

வெளியிணைப்புகள்

மேடைப்பேச்சுக்கள்
அறிமுகங்களும் நேர்காணல்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_ஜான்சன்_சர்லீஃப்&oldid=2715673" இலிருந்து மீள்விக்கப்பட்டது