உள்ளடக்கத்துக்குச் செல்

ஷோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷோபா
பிறப்புமகாலட்சுமி மேனன்
(1962-09-23)23 செப்டம்பர் 1962
இறப்பு1 மே 1980(1980-05-01) (அகவை 17) [1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சோபா மகேந்திரா, ஊர்வசி ஷோபா,[1] பேபி மகாலட்சுமி, பேபி ஷோபா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1966-1971, 1977–1980
பெற்றோர்கே. பி. மேனன்
பிரேமா
வாழ்க்கைத்
துணை
பாலு மகேந்திரா (1978–1980)

ஷோபா (Shobha, 23 செப்டம்பர் 1962 – 1 மே 1980)[2] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் இயற்பெயர் மகாலட்சுமி. இவர் தனது 17வது வயதில் பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.[3][4] 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார்.[5] இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.[6] அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இயக்குனர் பாலு மகேந்திராவைத் திருமணம் புரிந்தார்.[7]

தற்கொலை

[தொகு]

சோபா தனது 17வது அகவையில் தற்கொலை செய்து கொண்டார்.[8][9][10] இவரது தாயாரும் 1984 இல் தற்கொலை செய்து கொண்டார்.[11]

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

விருதுகள்

[தொகு]
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 United Press International (2 மே 1980). "All the city is a stage". த கசெட். http://news.google.com/newspapers?id=JYkxAAAAIBAJ&sjid=Z6QFAAAAIBAJ&pg=1250,542528&dq=shobha+balu+mahendra&hl=en. பார்த்த நாள்: 11 January 2012. 
  2. "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "The agony and ecstasy of being - Chandrababu". Southside. 2007. Archived from the original on 2008-06-19. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
  4. ராண்டார் கை (2 அக்டோபர் 2009). "A voice that mesmerised". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2009-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091106120522/http://www.hindu.com/fr/2009/10/02/stories/2009100250670400.htm. பார்த்த நாள்: 5 மார்ச் 2012. 
  5. "Film director P. Venu dead". தி இந்து. 26 மே 2011 இம் மூலத்தில் இருந்து 2011-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110808081738/http://www.hindu.com/2011/05/26/stories/2011052661790400.htm. பார்த்த நாள்: 5 மார்ச் 2012. 
  6. "P Venu dies of heart attack in Chennai". Oneindia.in. 26 மே 2011 இம் மூலத்தில் இருந்து 2014-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715054300/http://entertainment.oneindia.in/malayalam/news/2011/p-venu-died-heart-attack-260511-aid0062.html. பார்த்த நாள்: 5 மார்ச் 2012. 
  7. ராணி (2024-10-08). "குட்டி ஊர்வசியான நடிகை ஷோபா! - தாயார் பிரேமா". www.ranionline.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  8. S. R. Ashok Kumar (2002-05-03). "It's a heavy price to pay". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2003-07-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030704154904/http://www.hindu.com/thehindu/fr/2002/05/03/stories/2002050300330300.htm. பார்த்த நாள்: 2012-01-11. 
  9. "A story on suicides and actresses". Behindwoods.com. 2007-01-04. http://www.behindwoods.com/tamil-movie-news/jan-07-01/04-01-07-actress.html. பார்த்த நாள்: 2012-01-11. 
  10. "Why South Indian heroines are embracing death". மிட் டே. 2002-04-20. http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm. பார்த்த நாள்: 2012-01-11. 
  11. "உலக சினிமா". தினகரன். 22 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷோபா&oldid=4111165" இலிருந்து மீள்விக்கப்பட்டது