உள்ளடக்கத்துக்குச் செல்

தென்திருப்பேரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்திருப்பேரை
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

4,934 (2011)

574/km2 (1,487/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.6 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thenthirupperai

தென்திருப்பேரை (Thenthiruperai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். தென்திருப்பேரை நவதிருப்பதிகளில் ஒன்றாகும்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள தென்திருப்பேரை பேரூராட்சி, தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ளது.

இங்குள்ள தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், நவகைலாயிலத்தில் ஒன்றானது. தென்திருப்பேரை திருத்தலம் நூற்றியெட்டு வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் ஆகும்[4].

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,276 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,934 ஆகும்[5][6]

8.6 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

இங்கு பிறந்து புகழ் பூத்தோர்

[தொகு]
  • பி.ஸ்ரீ, எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தினமணி". Archived from the original on 2012-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  5. [http://www.census2011.co.in/data/town/803828-thenthiruperai.html தென்திருப்போரை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]
  6. >Thenthiruperai Town Panchayat
  7. தென்திருப்போரை பேரூராட்சியின் இணையதளம்

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்திருப்பேரை&oldid=3559139" இலிருந்து மீள்விக்கப்பட்டது