தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:தென்திருப்பேரை
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா

தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.[1] இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார்.[1]

தலவரலாறு[தொகு]

அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய இடம் இத்தலமாகும்.[1]

தல சிறப்பு[தொகு]

  • நவகைலாயத் தலங்களில் ஏழாவது தலம்[1]
  • நவக்கிரகங்களில் புதனுடையத் தலம்[1]
  • நவக்கிரகங்கள் சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் உள்ளனர்.[1]
  • அம்மன் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் உள்ளது.[1]
  • கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார்.[1]


ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Kailasanathar Temple : Kailasanathar Kailasanathar Temple Details - Kailasanathar- Thenthiruperai - Tamilnadu Temple - கைலாசநாதர்".