கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying km:ហ្គ្រាប្រីអ៊ែល ហ្រ្គារ៉ាស្សៀ​ ម៉ារ៉ាហ្គេស to [[km:ហ្គ្រាប្រីអ៊ែល ហ្រ្គារ៉ាស្សៀ ម៉...
சி தானியங்கி இணைப்பு: yi:גבריאל גארסיא מארקעס
வரிசை 125: வரிசை 125:
[[war:Gabriel García Márquez]]
[[war:Gabriel García Márquez]]
[[wuu:伽孛里艾勒 伽勒西亚 马勒概斯]]
[[wuu:伽孛里艾勒 伽勒西亚 马勒概斯]]
[[yi:גבריאל גארסיא מארקעס]]
[[yo:Gabriel García Márquez]]
[[yo:Gabriel García Márquez]]
[[zh:加夫列尔·加西亚·马尔克斯]]
[[zh:加夫列尔·加西亚·马尔克斯]]

10:54, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்
கொலம்பியாவிலுள்ள வல்லெடுப்பார் என்னும் இடத்தில் கார்சியா மார்க்கேஸ் (c. 1984).
கொலம்பியாவிலுள்ள வல்லெடுப்பார் என்னும் இடத்தில் கார்சியா மார்க்கேஸ் (c. 1984).
பிறப்புமார்ச்சு 6, 1927 (1927-03-06) (அகவை 97)
அராகட்டாக்கா, மக்தலேனா, கொலம்பியா
தொழில்புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர்.
தேசியம்கொலம்பியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1982)
கையொப்பம்

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் (Gabriel José de la Concordia García Márquez - பிறப்பு: மார்ச் 6, 1927) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். 1982ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solitude) நாவலுக்காக வழங்கப்பட்டது. சட்டம் பயில்வதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகிப் பத்திரிகையாளர் ஆனார். தொடக்கத்திலிருந்தே கொலம்பிய அல்லது வெளிநாட்டு அரசியலை விமர்சிப்பதற்கு இவர் பின்னின்றது இல்லை. 1958 ஆம் ஆண்டில் மேர்செடெஸ் பார்ச்சா (Mercedes Barcha) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரொட்ரிகோ, கொன்சாலோ என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர் பத்திரிகையாளடாகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆனாலும் இவர் எழுதிய புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். ஒரு நூற்றாண்டுத் தனிமை (One Hundred Years of Solitude) - 1967, காலராக் காலக் காதல் (Love in the Time of Cholera) - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. இவருடைய ஆக்கங்கள் திறனாய்வாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வணிக வெற்றிகளையும் பெற்றன.

தமிழில்

தமிழின் தீவிர இலக்கியப் பரப்பில் மார்க்கேஸ் நன்கு அறிமுகமானவர். இவரது பல சிறுகதைகளும் சில குறுநாவல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோணங்கி ஆசிரியராக இருக்கும் கல்குதிரை இதழ் மார்க்கேசுக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது.