இந்தியத் தத்துவ நூல்களும் ஆசிரியர்களும்
இந்தியத் தத்துவ இயல் நூல்களும் ஆசிரியர்களும் : இந்திய மெய்யியலுக்கு ஆறு முதன்மையான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது. அதில் நியாயம் (தர்க்கம்) தத்துவத்தை நிறுவியவர் கௌதமர். வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர். சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்), யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலிஆவர். மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினிஆவர், மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது. இதில் முதல் ஐந்தில் பிரம்மம் எனும் இறையியலைப் (பிரம்மம்) பற்றி பேசுவதில்லை. வேதாந்தம் ஒன்றுதான் மூலப்பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்தியத் தத்துவ இயலுக்கு இறைமறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும், சார்வகம் மற்றும் லோகாயதம் எனும் பொருள்முதல்வாதிகள், ஆசீவகம், பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும் இந்தியத் தத்துவ வளர்ச்சிக்கு மிக அதிகமாக பங்களித்துள்ளனர். இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள்முதல்வாதம் குறித்து அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.[1]
இந்தியத் தத்துவ இயல் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரம்
[தொகு]அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய பௌத்த கொள்கைகளை விளக்கும் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.
அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.
அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல். நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.
அபிதம்ம விபாசா : காத்தியாயனரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ் நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) எனும் துவைதம் மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism) வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.
அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.
அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல். ஆதிசங்கரர் எனும்அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அஜிதகேசகம்பிளி : கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள்முதல்வாதி.
அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.
அக்சபாதர் : கௌதமரின் மறு பெயர். நியாய தத்துவ (தர்க்கம்) அமைப்பினை நிறுவியர்.
ஆலம்பன பரீக்சா : திக்நாகர் என்பவர் எழுதியது. யோகசாரம் கருத்தியற்கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.
அனிருத்தர் : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ரங்களுக்கு விளக்கம் எழுதியவர்.
அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.
அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாயம் - வைசேடிக தத்துவவாதி. தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.
ஆபாதேவர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி
ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாதம், போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.
அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்மகீர்த்தி என்பவர் எழுதிய ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.
அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.
ஆரியதேவர் : கி பி.320இல் வாழ்ந்தவர். மத்தியமிகம் பௌத்த தத்துவத்தின் திறனாய்வாளர்.
ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.
அசங்கர் : கி.பி.450-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.
ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.
அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.
அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது. இதனை தொகுத்தவர் பைலர் எனும் ரிஷி.
ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.
பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் புகழ்பெற்ற வேதாந்த நூலை எழுதியவர்.
பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.
பகவத் கீதை : கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற தத்துவங்களை, ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரஸ்தானத்ரயம் எனும் மூன்று உயர்ந்த வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றில் பகவத் கீதையும் ஒன்று. பகவத் கீதைக்கு, ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் எழுதிய விளக்க உரைகள் குறிப்பிடத்தக்கது.
வாசஸ்பதி மிஸ்ரர்: தத்துவபிந்து மற்றும் பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் விளக்க உரைகளுக்கு விரிவுரை எழுதி பாமதி எனும் தன் மனைவியின் பெயரில் வெளியிட்டவர்.
பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.
பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.
பாட்ட மீமாம்சம் : குமரிலபட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.
பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.
பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.
பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.
போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமத தத்துவத்தை போற்றும் கவிதைகள்.
பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.
பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை, பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது. இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர்.
பிரகதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.
கௌதம புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.
புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.
புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மத்தியமிகம் புத்த தத்துவ நிபுணர்.
சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.
சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமிக புத்த தத்துவ நிபுணர்; நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.
சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.
சார்வகம்: சார்வகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள்முதல்வாதம் எனப்படும். சார்வாகர்என்ற பகுத்தறிவுவாதி ’சார்வகம்’ எனும் தத்துவத்தை நிறுவியவர்.
சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆரியதேவர் எழுதியது.
சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.
தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.
தத்துவ - சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.
தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.
திண்ணாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.
திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.
துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.
துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும் இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.
துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் எனும் தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.
சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாயம் தத்துவ நிபுணர்.
கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த நியாயம் தத்துவ அறிஞர்.
கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.
குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.
ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.
ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 - 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.
ஹேது - பிந்து : தர்மகீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.
ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல். (ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).
ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.
ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.
ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.
ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய - வைசேஷிக தத்துவ அறிஞர்.
ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர். இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.
ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்தியாயனர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான மஹாவிபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.
கமலசீலா : கி. பி. 750-இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.
கணாதன் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.
கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.
காத்தியாயனர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம் எனும் நூலை எழுதியவர்.
கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.
கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி
காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி, பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.
கிராணவளி : வைசேஷிகம் தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.
குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.
குமாரிலபட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர். பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.
லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.
லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.
லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.
லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர். இதனை சார்வகம் என்றும் அழைப்பர்.
மாதவர் : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.
மதுசூதன சரஸ்வதி : காலம் 1565-1650. அத்வைத சித்தி என்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.
மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.
மத்தியமிகம் : மகாயான பௌத்த சமயத்தின் கருத்தியல் பிரிவு. இதனை நிறுவியது நாகார்ஜுனர். யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.
மாத்யமிக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்
மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.
மகாசாங்கிகர்கள் : பழமைவாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள். பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.
மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.
மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.
மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு. இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.
மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.
மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.
மந்தன மிஸ்ரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.
மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.
மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.
மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது) எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.
மிலிந்த பன்ஹா : புத்தவியல் குறித்த நாகசேனர் எழுதிய பழங்கால பாலி மொழி நூல்.
பூர்வ மீமாம்சம்: ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.
உத்தர மீமாம்சம் : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.
மீமாம்ச சூத்ரா : மீமாம்சம் தத்துவம் பற்றிய மூல நூல்.
நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்
நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி விளக்கம் கொடுத்தவர்.
நவ்ய நியாயா : நவ நியாயம் (இந்து தத்துவம்). காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.
நியாயம் (இந்து தத்துவம்) (தர்க்கம்) : இத்ததுவத்தை நிறுவியவர் கௌதமர். அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.
நியாய - பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.
நியாய - பிந்து - திகா : ’நியாய - பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.
நியாய - கந்தழி : வைசேடிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.
நியாய - கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.
நியாய - குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.
நியாய-மஞ்சரி : நியாயம் (இந்து தத்துவம்)- வைசேஷிகம் முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.
நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.
நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.
நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.
நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.
நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ர்ர் எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.
பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேடிகம் தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.
பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.
பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.
பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த சமஸ்கிருத மொழி இலக்கண ஆசிரியர்.
பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.
பதஞ்சலி : பதஞ்சலி யோகசூத்திரம் எனும் நூலின் ஆசிரியர்
பயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.
திரிபிடகம் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.
பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.
பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை பரப்பியவர்.
பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.
பிரக்ஞ - ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.
பிரகரண - பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.
பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.
பிரமாண - வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.
பிரசன்ன - பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.
பதார்த்த - தர்ம - சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.
புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)
பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.
ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.
ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.
ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது. இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.
இராமானுசர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார். பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.
இராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேடிகம் நூல்களில் ஒன்று.
ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.
ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 - 1100 ஆகும்.
ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.
சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்சம் பற்றிய விளக்க நூல். இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான இந்நூலை எழுதியவர் சபரர்.
சபர பாஷ்யம் : மீமாம்சம் குறித்து விளக்க நூலை எழுதியவர் சபரர்.
சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.
சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.
சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8-வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.
சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.
சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.
சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது. இதனை தொகுத்தவர் ஜைமினி ரிஷி.
சங்கரர் : கி. பி.788 - 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர். இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர். மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.
சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. சாங்கியம் இத்தத்துவத்தை நிறுவியவர்.
சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணர் எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.
சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.
சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.
சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.
சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாடிகம் பௌத்தப் பிரிவின் தத்துவவாதி.
சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.
சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.
சாரீரக - பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.
சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.
சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.
சௌத்திராந்திகம் : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் பௌத்தப் பிரிவின் தத்துவம்.
சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.
சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.
சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.
சுலோக வார்த்திகா : குமரிலபட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.
ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.
ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.
சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.
ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.
சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.
சுரேஷ்வரர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர். சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.
சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.
தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரிலபட்டர் எழுதியது.
தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.
தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய-வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.
தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.
தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.
தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.
தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.
தத்வோபப்ளவசிம்மம் : ஜெயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல். பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.
துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச தத்துவ நூல்.
உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய - வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.
உத்யோதகாரர் : வாத்சாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள் என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தைபற்றியும், பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமை என்றும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள். ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். சங்கரருக்குப் பின் வந்தவர்களில் இராமானுசர் மற்றும் மத்வர் ஆகியோர் பாஷ்யம் எழுதியுள்ளனர்.
உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.
வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.
வைபாடிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.
வைசேஷிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.
வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.
வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.
வாசுதேவ சார்வபா உமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர். நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.
வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த அறிஞர். சௌத்திராந்திக யோகசாரம் எனும் பௌத்த தத்துவத்தை நிறுவியவர்.
வாத்சாயனர் : கி. பி. 4-வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.
வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது. இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.
வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.
வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்றும் பிட்சு சூத்திரம் என்றும் அழைப்பர்.
வேதாந்த சாரம் (நூல்) : 18-வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.
விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.
விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.
வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.
வித்யாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த விளக்க நூல் மிகவும் பிரபலமானது. மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி
விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.
விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.
விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.
விநயபிடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.
விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.
விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.
விவேகசூடாமணி (நூல்): ஆதிசங்கரர் எழுதியது.
யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை. பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.
யோககாரம் : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே உண்மை என்பது இவர்கள் கொள்கை.
யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.
பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.
யாக்யவல்க்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.
யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. மு. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.
யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல். இதனை தொகுத்தவர் வைசம்பாயனர்.
யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.
யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.
ஆதார நூல்கள்
[தொகு]- இந்த்தியத் தத்துவ இயல், ஒர் எளிய அறிமுகம், நூலாசிரியர், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, தமிழில் வி. என். இராகவன், அலைகள் வெளீட்டகம், சென்னை 600024.
- இந்தியத் தத்துவக் களஞ்சியம், சோ.ந. கந்தசாமி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
குறிப்புதவி நூல்கள்
[தொகு]- இந்தியத் தத்துவ இயல், சர்வபள்ளி. சர். வீ. இராதாகிருட்டிணன், முன்னாள் இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர்.
- இந்தியத் தத்துவ இயலின் வரலாறு, எஸ். என். தாஸ்குப்தா, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்
- இந்திய தர்க்க இயலின் ஆரம்பப் பாடநூல், கே. சாஸ்திரி, 1951, சென்னை.
- தர்சனா-திக்தர்சனா மற்றும் இந்திய தர்க்க இயலும் அணுகொள்கையும், ராகுல சாங்கிருத்யாயன்
- இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், எம். ஹரியண்ணா.
- இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், பி. டாய்சன், பெர்லின், 1907.
- இந்தியா என்றதொரு அதிசயம், ஏ. எல். பாஷ்யம்.
- லோகாயதா, டி. சட்டோபாத்தியா, புதுதில்லி,1959
- இந்திய தர்க்க இயலும் அணுக்கொள்கையும், ஏ. பி. கீத், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,1921
- நியாய - வைசேஷிக தத்துவ இயலின்படி பொருள் பற்றிய கோட்பாடு, யூ. மிஸ்ரா, 1936, அலகாபாத்.
- தர்க்க அலங்காரம், சந்திரகாந்தா,
- இந்திய தத்துவ இயல்களின் முன் ஊகங்கள், பிராண்டிஸ் ஹால், Inc., 1963
- கிழக்கின் புனித நூல்கள், ஜி. திபோ.
- பௌத்த காலத்திற்கு முந்தைய தத்துவ இயலின் வரலாறு, கல்கத்தா,1921.
- வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களில் மதமும் தத்துவமும், ஏ. பி. கீத், ஹார்வார்டு ஓரியண்டல் சீரிஸ், 1925.
- பதிமூன்று முக்கிய உபநிஷத்துக்கள், ஆர். ஈ. ஹியூம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பு, 1951.
- இந்திய இலக்கியத்தின் வரலாறு, எம். விண்ட்ர் நீட்ஸ்.
- வேதகால புராண இலக்கியம், ஏ. ஏ. மக்டோனல், ஸ்ட்ராஸ்பர்க், 1897
- தர்மசாஸ்திரங்களின் வரலாறு, பி. வி. கானே, பாகம் 2. புனே, 1941.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.இந்தியத் தத்துவ இயல், சர்வபள்ளி. சர். வீ. இராதாகிருட்டிணன்முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். 2. இந்தியத் தத்துவ இயலின் வரலாறு, எஸ். என். தாஸ்குப்தா, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். 3. இந்திய தர்க்க இயலின் ஆரம்பப் பாடநூல், கே. சாஸ்திரி, 1951, சென்னை. 4. தர்சனா-திக்தர்சனா மற்றும் இந்திய தர்க்க இயலும் அணுகொள்கையும், ராகுல சாங்கிருத்யாயன். 5. இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், எம். ஹரியண்ணா. 6. இந்தியத் தத்துவ இயலின் சுருக்கம், பி. டாய்சன், 1907,பெர்லின். 7. இந்தியா என்றதொரு அதிசயம், ஏ. எல். பாஷ்யம். 8. லோகாயதா, டி. சட்டோபாத்தியா, புதுதில்லி,1959. 9. இந்திய தர்க்க இயலும் அணுக்கொள்கையும், ஏ. பி. கீத், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,1921. 10. நியாய - வைசேஷிக தத்துவ இயலின்படி பொருள் பற்றிய கோட்பாடு, யூ. மிஸ்ரா, 1936, அலகாபாத். 11. தர்க்க அலங்காரம், சந்திரகாந்தா. 12. இந்திய தத்துவ இயல்களின் முன் ஊகங்கள், பிராண்டிஸ் ஹால், Inc., 1963. 13. மனுஸ்மிருதி. 14. அர்த்த சாஸ்திரம். 15. கிழக்கின் புனித நூல்கள், ஜி. திபோ. 16. பௌத்த காலத்திற்கு முந்தைய தத்துவ இயலின் வரலாறு, கல்கத்தா,1921. 17. வேதங்கள் மற்றும் உபநிஷத்துக்களில் மதமும் தத்துவமும், ஏ. பி. கீத், ஹார்வார்டு ஓரியண்டல் சீரிஸ், 1925. 18. பதிமூன்று முக்கிய உபநிஷத்துக்கள், ஆர். ஈ. ஹியூம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பு, 1951. 19. இந்திய இலக்கியத்தின் வரலாறு, எம். விண்ட்ர் நீட்ஸ். 20. வேதகால புராண இலக்கியம், ஏ. ஏ. மக்டோனல், ஸ்ட்ராஸ்பர்க், 1897. 21. தர்மசாஸ்திரங்களின் வரலாறு, பி. வி. கானே, பாகம் 2. புனே, 1941.