பாமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாமதி (Bhamati), இந்தியாவில் கி. பி., ஒன்பாதம் ஆண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியான வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு (சுருக்கமான விளக்கம்), பாமதி என்ற பெயரில் மிக விரிவான உளக்க உரை எழுதியவர்.[1]

பெயர்க்காரணம்[தொகு]

இந்து தொன்ம கதைகளின்படி, வாசஸ்பதி மிஸ்ரரின் மனைவியின் பெயர் பாமதி ஆகும். மிதிலை நகரில் வாழ்ந்த வாசஸ்பதி, ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்தை, தெளிவாகவும் விரிவாகவும் அறிய, விரிவான விளக்க உரை (விவரணம்) நூலை, தன்னையே மறந்து அதிலேயே மூழ்கி ஆழ்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில், தனக்கு தொடர்ந்து பணி விடை செய்து கொண்டிருந்த பாமதியை மறந்து விட்டார். தனது விவரணம் எனும் பிரம்ம சூத்திர விளக்க நூலை எழுதி முடித்த பின்பு பாமதியைப் பார்த்து நீ யார்? எனக் கேட்க, தானே தங்கள் மனைவி பாமதி எனக்கூற, வாசஸ்பதி மிஸ்ரர், தனது மனைவியை மறந்து நூலை எழுதியமைக்கு மனம் வருந்தி, தன் பணிக்கு ஊறு வராமல் தொடர்ந்து சேவை செய்த, தன் மனைவியின் பெயரையே, தான் எழுதிய பிரம்ம சூத்திர விவரண நூலுக்கு பாமதி எனப் பெயரிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமதி&oldid=2227865" இருந்து மீள்விக்கப்பட்டது