புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில்[1]
பெயர்
பெயர்:புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:புலவர்நத்தம், (சாத்தனூர் அஞ்சல்)
மாவட்டம்:திருவாரூர், வலங்கைமான் தாலுக்கா
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ நிருதீஸ்வரர்
தாயார்:ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி
தீர்த்தம்:நிருதி தீர்த்தம்
தொலைபேசி எண்:9488109428, 9444879305, 9442705312[1]

புலவர்நத்தம் நிருதீஸ்வரர் கோயில், குருத்தலமான திருஆலங்குடிக்கு தென்மேற்கே ஒரு கி.மீ தொலைவில், ஆலங்குடி திருத்தலத்திற்கு நிருதி பாகமான புலவர்நத்தம் கிராமத்தில் உள்ள தொன்மையான சிவாலயம். திருஆலங்குடிக் கோயிலைச் சுற்றி ஒவ்வோர் திசைக்கும் ஒவ்வொன்றாய் உள்ள கோயில்களில் நிருதி பாகத்துத் திருத்தலமிது.[1]

வரலாறு[தொகு]

பூளைவன நத்தம் என்ற பெயரில் பெரிய நகராக விளங்கிய ஊர் இவ்வூர். வங்கனார் என்ற சங்கப்புலவர் இத்திருத்தலத்தின் சக்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து புலவர் நத்தம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

சங்கப்புலவர்கள், மகான்கள்,பாடகச்சேரி சுவாமிகள் முதலானோர் வழிபட்டு வந்த திருத்தலம்.

இத்திருத்தல அம்பிகை தர்மத்தின் வடிவாக விளங்குகின்றார். ஜோதிட ரீதியில் திருமணத்தடை நீக்கும் தலமாகக் கூறப்படுகின்றது. குரோதன பைரவர் சந்நிதியும் உள்ளது.

அருகிலுள்ள திருக்கோயில்[தொகு]

பூதேவி, ஸ்ரீதேவி உடனுறை கரியமாணிக்கப்பெருமாள் (இவர் சனிக்கிரக தோஷத்தைப் போக்குபவராகக் குறிப்பிடப்படுகின்றார்.) [1]

கும்பாபிஷேகம்[தொகு]

புலவர்நத்தத்தில் அமைந்த நிருதீஸ்வரர் மற்றும் கரியமாணிக்கப்பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் 12.05.2013 அன்று நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 குமுதம் ஜோதிடம்; 10.05.2013;