உள்ளடக்கத்துக்குச் செல்

நாசரேத்து (தூத்துக்குடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாசரேத்து
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,584 (2011)

1,468/km2 (3,802/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.3 சதுர கிலோமீட்டர்கள் (4.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nazareth

நாசரேத்து (Nazerath), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நாசரேத்து எனப்பெயரிடப்பட்டது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தூய யோவான் பேராலயம் உள்ளது. நாசரேத் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தினர் அதிகளவில் உள்ளனர்.

நாசரேத்திற்கு கிழக்கே திருச்செந்தூர் 25 கிமீ, வடக்கே தூத்துக்குடி 50 கிமீ, மேற்கே திருநெல்வேலி 35 கிமீ, தெற்கே சாத்தான்குளம் 15 கிமீ தொலைவிலும் உள்ளது.

11.3 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 24,862 ஆகும்.

குடியேற்றம்

[தொகு]

1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர்.[5]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. நாசரெத் பேரூராட்சியின் இணையதளம்
  5. அ.கணேசன் எழுதிய எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு கட்டுரை


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசரேத்து_(தூத்துக்குடி)&oldid=3749480" இலிருந்து மீள்விக்கப்பட்டது