தோகாரிசஞ்சாரா
தோகாரிசஞ்சாரா அருவி Dokarichanchara Waterfalls | |
---|---|
![]() | |
![]() | |
அமைவிடம் | காலிகாரா, கோக்சாரா, ஒடிசா |
ஆள்கூறு | 19°37′13.6″N 82°32′59.4″E / 19.620444°N 82.549833°E |
ஏற்றம் | 150 அடி (46 m) |
மொத்த உயரம் | 100 அடி (30 m) |
வீழ்ச்சி எண்ணிக்கை | 2 |
நீர்வழி | பெகெரா ஆறு |
தோகாரிசஞ்சாரா (ஆங்கிலம்: Dokarichanchara; Odia: ଡୋକରୀଚଂଚରା) இந்தியாவின் ஒடிசாவின் கலஹண்டி, கோக்சரா, காலிகர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலமாகும்.[1]
அருவி
[தொகு]காலாஹண்டி, இந்தியா அல்லது ஒடிசாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் பழமையான இடங்களில் ஒன்றாகும். தோகாரிசஞ்சாரா என்பது கலஹண்டி மற்றும் நபரங்பூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கோகசரா கிராமத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமாகும். கலாஹண்டியில் உள்ள மற்ற கவர்ச்சிகரமான சுற்றுலா மையங்களை விட இது முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான இடமாகும். தோகாரிசஞ்சாரா இதன் இரண்டு பிரபலமான நீர்வீழ்ச்சிகளான தோகாகரிதாரா மற்றும் பன்யரகுமாரா (அல்லது பைரவ் தர்) ஆகியவற்றால் பிரபலமானது. மேலும், இதன் அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குடஹந்தி குகை இந்த இடத்தை மேலும் முக்கியத்துவப்படுத்துகிறது. ஜவ்வரிசி (குடா) பானை (கந்தி) போல தோற்றமளிப்பதால் குடகந்தி குகை என்று பெயரிடப்பட்டது. இங்கு வரலாற்றுக்கு முந்தைய இலக்கியங்கள், சித்திரக் கல்வெட்டுகள் மற்றும் கல் சுவர்களில் வடிவமைக்கப்பட்ட வரைபடங்களைக் காணலாம்.[2]
சுற்றுலா
[தொகு]சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் காரணமாக ஒடிசா முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இராம நவமி, ஒவ்வொரு ஆண்டும் 9 நாட்கள் இங்கு நடைபெறும் திருவிழாவாகும்.[3]
படங்கள்
[தொகு]குடாகந்தி
[தொகு]-
குடகந்தி பாறை ஓவியங்கள்
-
குடகந்தி குகையில் காணபப்டும் பாறை ஓவியங்கள்
தோககாரிசஞ்சாரா அருவி
[தொகு]இராம நவமி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Places of Interest | Kalahandi District: Odisha" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-01-18.
- ↑ https://kalahandi.nic.in/places-of-interest/
- ↑ "Ram Navami celebrated with fervour in Odisha". Retrieved 2019-01-18.