வேலிகொண்டா மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 14°45′N 79°10′E / 14.750°N 79.167°E / 14.750; 79.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலிகொண்டா மலைத்தொடர் (Velikonda Range) அல்லது வேலிகொண்டா மலைகள் தாழ்வான மலைத்தொடர் ஆகும். இது கிழக்கு இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைப்பின் ஒரு பகுதியாகும்.[1] வேலிகொண்டா மலைத்தொடர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

வேலிகொண்டாக்கள் கேம்ப்ரியன் காலத்தில் (சுமார் 540 முதல் 490 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உயர்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை பண்டைய மலைகளின் நினைவுச்சின்னங்கள். இவை ஏராளமான நீரோடைகளால் அரிக்கப்பட்டு சிதைந்துள்ளது. சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும் பிரதான தொடருந்து வழித்தடம் வெலிகொண்டா மற்றும் பால்கொண்டா மலைகளுக்கு இடையே தெற்கே உள்ள பென்னேரு ஆற்றால் உருவாக்கப்பட்ட தடம் வழியேச் செல்கிறது. வேலிகொண்டா மலைத்தொடர் 2,500 முதல் 3,000 அடிகள் (750 முதல் 900 மீட்டர்கள்) உயரமுடையன. இங்கு செஞ்சு மக்களின் சில சிதறிய குழுக்களைத் தவிர வேறு யாரும் இல்லை.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.britannica.com/place/Velikonda-Range
  2. https://www.mindat.org/feature-1253299.html
  3. "Velikonda Range - Alchetron, The Free Social Encyclopedia". Alchetron.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலிகொண்டா_மலைத்தொடர்&oldid=3788273" இலிருந்து மீள்விக்கப்பட்டது