உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம்

ஆள்கூறுகள்: 15°39′40″N 78°44′43″E / 15.6612°N 78.7452°E / 15.6612; 78.7452
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம்
Gundla Brahmeswaram Wildlife Sanctuary
Blue tiger (Tirumala limniace) butterflies in the Gundla Brahmeswaram Wildlife Sanctuary
குண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகத்தில் நீலப்புலி (திருமலை லிம்னியாசு) பட்டாம்பூச்சிகள்
Map showing the location of குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary
Map showing the location of குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary
Map showing the location of குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary
Map showing the location of குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் Gundla Brahmeswaram Wildlife Sanctuary
அமைவிடம்நந்தியால் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்15°39′40″N 78°44′43″E / 15.6612°N 78.7452°E / 15.6612; 78.7452
பரப்பளவு1,194 km2 (461.0 sq mi)
நிறுவப்பட்டது1990
நிருவாக அமைப்புஆந்திரப்பிரதேச வனத்துறை

குண்டல பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் (Gundla Brahmeswaram Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இச்சரணாலயத்தின் வடக்கு பகுதி நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

வரலாறு

[தொகு]

குண்டலா பிரம்மேசுவரம் காட்டுயிர் காப்பகம் செப்டம்பர் 18, 1990 அன்று வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] குண்டலா பிரம்மேசுவரம் பீடபூமியிலிருந்து இந்த சரணாலயம் இதன் பெயரைப் பெற்றது.[2]

விளக்கம்

[தொகு]

குண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு சரணாலயம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.[3] இது மந்திராலம்மா கனும மற்றும் நந்திகனுமா மலைப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளது.[1] இந்த சரணாலயம் 1,194 km2 (461.0 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[3] இந்த காட்டுயிர் காப்பகத்தின் வடக்குப் பகுதியில் நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதியாக உள்ளது.[1] இந்த சரணாலயத்தின் வழியாக குண்டலகம்மா ஆறு ஓடுகிறது.[1]

தாவரங்களும் விலங்கினங்களும்

[தொகு]

அருகிய பத்து சிற்றினங்கள் உட்பட 353 வகையான தாவரங்கள் இங்குக் காணப்படுகின்றன.[1] குண்டலா பிரம்மேசுவரா சரணாலயத்தில் உள்ள பாலூட்டிகளில் குரங்குகள், சிறுத்தைகள், புலிகள், எலிகள், துரும்பன் பூனைகள், இந்திய பறக்கும் அணில், குதிரை இலாட வௌவால், சருகுமான், எறும்புத்தின்னி, கடமான், நீலான் மற்றும் குல்லாய் குரங்கு ஆகியவை அடங்கும்.<[1][2] 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சரணாலயத்தில் 23 புலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 17 பெண் புலிகள், ஐந்து ஆண் புலிகள் மற்றும் குட்டி புலி ஒன்று அடங்கும்.[3]

அச்சுறுத்தல்கள்

[தொகு]

குண்டலா பிரம்மேசுவரம் வனவிலங்கு காப்பகத்தில் உள்ள உள்நாட்டுப் பல்லுயிர் வளம் ஆக்கிரமிப்பு தாவர வகைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "GUNDLA BRAHMESWARAM WILDLIFE SANCTUARY". forests.ap.gov.in. Andhra Pradesh Forest Department.
  2. 2.0 2.1 "Gundla Brahmeswara Wildlife Sanctuary | Wildlife in India Foundation". 30 December 2019.
  3. 3.0 3.1 3.2 Staff Reporter (3 May 2019). "23 tigers spotted in Gundla Brahmeswaram Sanctuary" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/23-tigers-spotted-in-gundla-brahmeswaram-sanctuary/article27028912.ece. 
  4. "Inventory of invasive alien plant taxa in gundla brahmeswaram wildlife sanctuary, Nallamalais, India: Implications for monitoring and management". International Journal of Ecology and Environmental Sciences 3 (3). 2021. http://www.ecologyjournal.in/archives/2021.v3.i3.411.