சம்பாவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சம்பாவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தென்கடா த்டுப்பன

சம்பாவதி ஆறு (தெலுங்கு: చంపావతి) கிழக்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1,200 அடி  உயரத்தில், ஆந்திர கிராமத்திற்கு அருகில் தோன்றும் ஒரு சிறு ஆறாகும். கொனடா கிராமத்திற்கு அருகே, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. விசயநகர மாவட்டத்தின், கசபதிநகரம், நெல்லிமார்லா, சாரிபல்லி, தென்கடா, பாலம்,மற்றும் நடவால்சா வழியாக பாய்கிறது. இடுவாம்புலா கேட்டா, சிட்டா கேட்டா, பொதுலா கேட்டா மற்றும் காடி கேட்டா  ஆகியன இவ்வாற்றின் கிளைஆறுகளாகும். 1,410சதுர கிமீ கொண்ட வடிநில பகுதி, பாறை நிலப்பரப்பு,(மதுகுலா மலை), விசயநகர சமவெளி மற்றும் கடலோர சமவெளி என பிரிக்கப்படுகிறது.[1]

1965-1968ஆம் ஆண்டுகளில், தென்கடா அனை கட்டப்பட்டது. இவ்வனை, சாரிபல்லி கிராமம், நெல்லிமார்லா மண்டலம் மற்றும் விசயநகர மாவட்டம் ஆகியவற்றின் 5,153 ஏக்கர் நில பாசனத்திற்காக் கட்டப்பட்டது.

தாராகர்மா தீர்தா சாகரம் தடுப்பனை 6,690 ஹெக்டேர் நிலப் பாசனத்திற்காக கட்டப்பட்டது. 60 மில்லியன் கொள்ளளவு கொண்ட குமிளி அனை பாசனத்திற்காக இவ்வாற்றின் வடிநிலத்தில் கட்டப்பட்டுள்ளது. [2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பாவதி_ஆறு&oldid=2752441" இருந்து மீள்விக்கப்பட்டது