நல்லமலா மலைகள்

ஆள்கூறுகள்: 15°40′41″N 78°47′10″E / 15.67806°N 78.78611°E / 15.67806; 78.78611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லமலை மலைகள்
நல்லமலை
நல்லமலா மலைக்காடுகள்
உயர்ந்த இடம்
உச்சிபாய்ராணி கொண்டா (சிகரேஸ்வரம்)
உயரம்3,608 அடி (1,100 m)
ஆள்கூறு15°40′41″N 78°47′10″E / 15.67806°N 78.78611°E / 15.67806; 78.78611
பரிமாணங்கள்
நீளம்90 mi (140 km) வடக்கு-தெற்கு
புவியியல்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திர பிரதேசம், தெலங்காணா
நிலவியல்
பாறையின் வயதுProterozoic

நல்லமலை மலைகள் (நல்லமலா மலைத்தொடர்கள்) இந்தியா நாட்டில் உள்ள கிழக்கு குன்றுகளின் ஒரு பகுதி ஆகும்.இந்த மலைக்காடுகள் இந்திய நாட்டின் ஆந்திர மாநிலம் கர்நூல், நெல்லூர், குண்டூர், பிரகாசம், கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்கள் மேலும் தெலங்காணா மாநிலம் மகபூப்நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் பரவி இருக்கிறது. இது பொதுவாக வடக்கு-தெற்காக பரவி உள்ளது. சோழ மண்டலக் கடற்கரைக்கு இணையாக மேற்கே சும்மா 430 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலைக்காடுகள் கிருஷ்ணா ஆறு மற்றும் வட பெண்ணை ஆறுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லை நீர் பாசன பகுதியாகவும் தெற்கு எல்லை திருப்பதி மலையுடன் இணைந்தும் உள்ளது.

இது மிகவும் பழமைவாய்ந்த மலைக்காடுகள் ஆகும். இந்த மலைகள் பல ஆண்டுகளாக கடுமையான காலநிலை மற்றும் காற்று அரிப்பால் தாக்குதலுக்கு உள்ளாகுகிறது. மலைத்தொடரின் சராசரி உயரம் 520 மீட்டர் ஆகும். உயரிய சிகரங்களான பாய்ராணி கொண்டா 1100 மீட்டர், குண்டல் பரமேஸ்வரா 1048 மீட்டர் ஆகும்[1]. இந்த இரு சிகரங்களும் கம்பம் நகரத்திற்கு வடமேற்காக அமைந்துள்ளது. மற்றும் 800 மீட்டர் அளவுடைய பல சிகரங்கள் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது.[2]

நிலவியல்[தொகு]

நல்லமலா மலைத்தொடரின் பாறைகள் கடப்பா கரும்பாறைகள் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 20,000 அடிகள் வரை தடிமன் கொண்டது ஆகும்.[3] இவைகள் பெரும்பாலும் ஒழுங்கற்ற கருங்கல்லால் ஆன குவார்ட்ஸ் பாறைகள் மற்றும் சில இடங்களில் மணற்கற்கலான பாறைகள் கொண்டது ஆகும். இங்குள்ள பாறைகள் மிகவும் ஒழுங்கற்றவையாகவும், மென்மையாகவும் இருக்கின்றன எனவே இங்கு வணிகச் சுரண்டல் சாத்தியமற்றதாக உள்ளது. இந்த பாறைகள் ஏறக்குறைய உலகின் பழமைவாய்ந்த மற்றும் மிகப்பெரிய எரிமலைக் குழம்பால் உருவாக்கப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான ஒரு மலைத்தொடர் ஆகும். இதற்கு சான்றாக பாறைகளில் காணப்படும் மடிப்புகள் அமைந்துள்ளது.[2]

முக்கிய இடங்கள்[தொகு]

ஸ்ரீசைலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்த பெரிய நீர்மின் நிலையம் மாநிலத்தின் ஒரு முக்கிய மின் உற்பத்தி நிலையம் ஆகும். மேலும் ஶ்ரீசைலம் சிவாலயம் ஒரு சிறப்பு மிக்க பழமைவாய்ந்த ஆலயம் ஆகும். மகாநந்தி ஆலயம் மற்றும் அகோபிலம் ஒன்பது நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ள இடம் நல்லமலா ஆகும்.ஒரு நீரோடை குண்டல பிரம்மேச்வரா சிகரத்தில் இருந்து கீழே நீர்வீழ்ச்சியாக வீழ்கிறது. இதனால் உருவாகும் குளம் நெமலிகுண்டம் (மயில் குளம்) என அழைக்கப்படுகிறது. கிருஷ்ணா ஆற்றில் அமைந்த மல்லேலா தீர்த்தம் நீர்வீழ்ச்சி இந்த காட்டில் உள்ளது.

கம்பம் ஏரி ஆசிய கண்டத்தில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட பழமையான ஏரிகளில் ஒன்று. இது 15 ஆம் நூற்றாண்டு பகுதியில் ஒரிசாவை ஆண்ட கஜபதி மன்னர்களால் 420 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பாசனத்திற்காக கட்டப்பட்டது. இது ஒரு நீர் தேக்கமாக ஒரு சிறு வழிதடம் கொண்டு இரு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பின் 16 ஆம் நூற்றாண்டு பகுதியில் ஆண்ட விஜயநகர இராச்சிய அரசி வரதராஜம்மா இதை மறுசீரமைப்பு செய்தார்.[4]

நிகழ்வுகள்[தொகு]

2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள் பெல்-430 இடைநிலை வகையைச் சேர்ந்த வானுார்தி ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.எ. சா. ராஜசேகர், இரு விமானிகள், தலைமை பாதுகாவல் அதிகாரி மற்றும் தனி அலுவலர் ஆகியோரை சுமந்து சென்றது. நல்லமலா காட்டுப்பகுதியில் இவர்கள் வரும்போது மாயமானார்கள். சுமார் 24 மணிநேரத்தில் காவல்துறை, துணை இராணுவம், இந்திய இராணுவம், இந்திய விமானப்படை, இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பலர் தேடுதலில் ஈடுபட்டு வானுார்தி பாகங்கள் 800 அடிகள் உயர பகுதியான பாவுராலு கொண்ட (புறாக்களின் மலை) என்ற மலை பகுதியில் நொறுங்கி காணப்பட்டது. எனவே அதில் பயணம் செய்த ஐவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு காரணம் கடுமையான காலநிலை நிலவியதே காரணம்.[5][6]

புகைப்பட தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Google Earth
  2. 2.0 2.1 http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V18_352.gif
  3. Manikyamba, C; Kerrich, Robert; González-Álvarez, Ignacio; Mathur, Ramavati; Khanna, Tarun C (2008), "Geochemistry of Paleoproterozoic black shales from the Intracontinental Cuddapah basin, India: Implications for provenance, tectonic setting, and weathering intensity", Precambrian Research, 162 (3–4): 424, doi:10.1016/j.precamres.2007.10.003
  4. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?volume=11&objectid=DS405.1.I34_V11_080.gif
  5. http://www.ndtv.com/news/india/ysrs_helicopter_traced.php
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லமலா_மலைகள்&oldid=3716184" இலிருந்து மீள்விக்கப்பட்டது