நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 16°18′N 78°59′E / 16.300°N 78.983°E / 16.300; 78.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம்
காட்டுயிர் காப்பகம்
நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம் is located in இந்தியா
நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம்
நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம்
ஆந்திரப்பிரதேசம், தெலங்காணவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°18′N 78°59′E / 16.300°N 78.983°E / 16.300; 78.983
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
தெலங்காணா
மாவட்டம்கர்னூல் மாவட்டம், குண்டூர் மாவட்டம், பிரகாசம் மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம், நல்கொண்டா மாவட்டம்
நிறுவப்பட்டது1983
பரப்பளவு
 • மொத்தம்3,728 km2 (1,439 sq mi)
ஏற்றம்917 m (3,009 ft)
மொழி
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அருகிலுள்ள நகரம்ஸ்ரீசைலம், கர்னூல், ஐதராபாத்து, குண்டூர் (316 km (196 mi))
IUCN categoryIV
Visitationவரையறுக்கப்பட்ட சுற்றுலா
அரசுஇந்திய அரசு, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), புலிகள் பாதுகாப்புத் திட்டம்
மழையளவு1,000 மில்லிமீட்டர்கள் (39 அங்)
சராசரி கோடை வெப்பம்43 °C (109 °F)
சராசரி குளிர்கால வெப்பம்16 °C (61 °F)
இணையதளம்projecttiger.nic.in/nagarjunasagar.htm

நாகார்ஜுனசாகர்-சிறீசைலம் புலிகள் காப்பகம் (Nagarjunsagar-Srisailam Tiger Reserve) இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இந்த புலிகள் காப்பகம், கர்நூல் மாவட்டம், பிரகாசம் மாவட்டம், குண்டூர் மாவட்டம், நல்கொண்டா மாவட்டம் மற்றும் மகாபூப்நகர் மாவட்டம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பரவியுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு 3,728 km2 (1,439 sq mi) ஆகும்.[1] இந்த இருப்பின் மையப் பகுதி 1,200 km2 (460 sq mi) ஆகும். ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம், சிறீசைலம் கோயில் இப்பகுதியின் முக்கியச் சுற்றுலாத் தலமாகும்.[2] இது இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வாழும் வனப்பரப்பாகும். இது நல்லமலா காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. .

நிலவியல்[தொகு]

நாகார்ஜுனா சாகர் அணை

இந்த புலிகள் சரணாலயம் தீர்க்கரேகைக்கு 78°30' முதல் 79°28' கிழக்கு மற்றும் அட்சரேகை: 15°53'முதல் 16°43' வடக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த அமைவிடம் கடல் மட்டத்திற்கு மேலே 100 m (330 அடி) முதல் 917 m (3,009 அடி) வரை மாறுபடுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 1,000 mm (39 அங்) ஆகும்.

இந்த மலைத் தொடர்களில் பல பீடபூமிகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஆமராபாத்து, சிறீசைலம், பெடச்செருவு, சிவபுரம், மற்றும் நீக்காந்தி ஆகும். நாகார்ஜுனாசாகர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இது ஜூன் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் இறுதி வரை பெய்கிறது. கிருஷ்ணா ஆற்றின் படுகையை சுமார் 200 m (660 அடி) 130 km (81 mi) ஆழத்தில் 130 கி.மீ. தூரம் வரை இந்த காப்பகம் வழியே செல்கிறது. எத்திபோத்தலா அருவி, பெடா இடுகுடு, குந்டம் மற்றும் சலேசுவரம் உள்ளிட்ட பல நீர்வீழ்ச்சிகள் இப்பகுதியில் உள்ளன.[2]

பண்டைய வரலாறு[தொகு]

சிறீசைலத்தில் பல பழமையான கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மல்லிகார்ஜுனா அவரது துணைத் தெய்வமான பிரமரம்பா கோயில். இந்தியாவில் உள்ள பன்னிரண்டு புனித சைவ ஜோதிர்லிங்க தலங்களில் இதுவும் ஒன்றாகும். பதினெட்டு மகாசக்தி பீதங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த பகுதியில் நாகார்ஜுனா விஸ்வ வித்யாலயத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த தளம் ஒரு காலத்தில் பல பவுத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மடங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது.

பொது ஊழிக்கு முன் 3ஆம் நூற்றாண்டின் இந்திய ஆட்சியாளரான இச்வாகு சந்திரகுப்த மெளரியர் நிர்ஜிவபுரத்தினை ஆண்ட கோட்டைப்பகுதியின் அழிவுகள் காணப்படுகின்றது. காக்கத்தியா வம்சத்தின் மன்னர் பிரதாப் ருத்ராவின் பழங்கால கோட்டை மற்றும் பல கோட்டைகள் கிருஷ்ணா ஆற்றின் கரையில் காணப்படுகின்றன. 169 கி.மீ. நீளமுள்ள பண்டையச் சுவர் ஒன்று இங்குக் காணப்படுகிறது. இது காக்கத்தியர்களால் கட்டப்பட்ட வரலாற்று அம்சமாகும்.

இந்த பகுதியில் பாறைகளில் தங்குமிடங்கள் பல உள்ளன. அக்கா மகாதேவி பிலம், தத்தாத்ரேய பிலம், உமா மகேஸ்வரம், கடலிவனம், பழங்கசரி உள்ளிட்ட குகைக் கோயில்கள் பல உள்ளன.[2][3]

தாவரங்கள்[தொகு]

இந்த வனப்பகுதியில் முக்கியமான காடுகளாக, தெற்கு வெப்பமண்டல உலர் கலப்பு இலையுதிர் காடு, ஆச்சா காடு மற்றும் தக்காண முள் புதர் காடுகள், கள்ளி புதருடன் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் முக்கியமான தாவர இனங்கள் அனோஜெசுசசு லேடிபோலியா, கிலெசிதானத்துசு சோலினசு, தெர்மினலியா சிற்றினங்கள், வேங்கை, ஆச்சா (அஞ்சன் மரம்), போஸ்வில்லியா செரட்டா (பறங்கி சாம்பிராணி), தேக்கு, முண்டுலே செரிசியா மற்றும் அல்பீசியா சிற்றினங்கள் உள்ளன.[2]

விலங்குகள்[தொகு]

இங்கு பாலூட்டி இனங்களான, வங்காளப்புலி, இந்தியச் சிறுத்தை, தேன்கரடி, உஸ்ஸூரி செந்நாய், இந்திய எறும்புண்ணி, புள்ளிமான், கடமான், சருகுமான், புல்வாய், இந்திய சிறுமான்மற்றும் நாற்கொம்புமான் இனங்களும் சதுப்புநில முதலை, இந்திய மலைப் பாம்பு, இந்திய நாகம், சாரைப்பாம்பு, இந்திய உடும்பு, இந்திய நட்சத்திர ஆமை மற்றும் இந்திய மயில் ஆகியவை அடங்கும்.[2] அசுவமேத துடிக்கும் அரணை, சர்மாவின் மாபூயா பல்லிகள் மற்றும் நாகார்ஜுன சாகர் ரேசர் பாம்பு போன்ற இப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் உயிரினங்களும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 National Tiger Conservation Authority. "Nagarjunasagar Tiger Reserve". Reserve Guide – Project Tiger Reserves in India. Ministry of Environment and Forests, Govt. of India. Archived from the original on 30 December 2011.
  3. National Tiger Conservation Authority (1993). "Nagarjunasagar – Srisailam Tiger Reserve". PT status '93. Bikaner House, Shahjahan Road, New Delhi: Ministry of Environment and Forests, Govt. of India. Archived from the original on 23 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-02-10.