பால்கொண்டா மலைகள்
பால்கொண்டா மலைகள் | |
---|---|
பால்கொண்டா | |
கடப்பா மாவட்டத்தில் பால்கொண்டா மலைகள் | |
உயர்ந்த புள்ளி | |
ஆள்கூறு | 14°20′47″N 78°39′06″E / 14.34639°N 78.65167°E |
புவியியல் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிலவியல் | |
பாறையின் வயது | கேம்பிரியன் |
பால்கொண்டா மலைகள் (Palkonda Hills) என்பது தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருக்கும் மலைத்தொடர் ஆகும். பால் கொண்ட மலைகள் "பால் மலைகள்" என்று பொருள்படும். இவை வடமேற்கிலிருந்து தென்கிழக்கு திசையில் திருப்பதி புனித யாத்திரை மையத்தில் முடிவடைகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]பால்கொண்டா என்ற பெயர் "பால் மலைகள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு வார்த்தைகளான பால் அதாவது பால் மற்றும் கொண்டா என்றால் மலை ஆகியவற்றின் கலவையாகும். இம்மலைகளில் மேய்ச்சல் நிலங்கள் இருப்பதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது.[1] [2]
புவியியல்
[தொகு]பால்கொண்டா மலைத்தொடர் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு திசையில் உள்ளது. இது அனந்தபூர் மற்றும் கடப்பா மாவட்டங்களைக் கடந்து செல்கிறது. இந்த மலைகள் சராசரியாக 2,000 அடி உயரமுடையது. இம்மலைத்தொடரின் மிக உயர்ந்த பகுதியான 3,060 அடி புட்டெய்டில் உள்ளது. மேற்கு பகுதி விரிவாக்கம் அனந்தபூரில் சேசாசலம் மலையாக உருவாகின்றது.[3][4]
பால்கொண்டா மலைகள் கேம்ப்ரியக் காலத்திலிருந்து உருவாகிய மலைகள் ஆகும். இவை 500 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்ணாறு மற்றும் அதன் துணை ஆறுகளால் அரிக்கப்பட்டன. மலைகள் பெரும்பாலும் எரி கற்குழம்பு மற்றும் சிலேட்டுக் கல் படிவுகளுடன் கூடிய குவார்ட்சைட் அமைப்புகளால் ஆனவை.[3][4]
ஆறுகள்
[தொகு]பன்சூ மற்றும் செய்யாறு இந்த வட்டாரத்தின் ஓடும் முக்கிய ஆறுகள் ஆகும். சித்ராவதி மற்றும் பாபாக்னி ஆறுகள் இணைந்து பல வடிநிலங்களைத் தொடர்ச்சியாக உருவாக்குகின்றன. பால்கொண்டாவிற்கும் அதன் இணையான வேலிகொண்டாவிற்கும் இடையில் பல நீரோடைகள் உள்ளன. இந்நீரோடைகளில் பள்ளத்தாக்குகளில் நீர்ப்பாசனம் செய்வதற்காக அணைகள் கட்டப்பட்டுள்ளன.[3][4] சோளம் மற்றும் நிலக்கடலை இங்குப் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் ஆகும்.[5]
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
[தொகு]இந்த மலைகளில் தேக்குமரக் காடுகள் உள்ளன, மேலும் இது மிகவும் அழிந்து வரும் ஜெர்டன் கல்குருவியின்வாழிடமாகவும் உள்ளது.[6][7]
மனித வாழ்விடங்கள்
[தொகு]திருமலை மற்றும் கோவில் நகரமான திருப்பதியின் புனித மலை பால்கொண்டா மலைத்தொடரின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ளது.[2] மும்பை - சென்னை தொடருந்து வழித்தடம் குண்டக்கல் மற்றும் ரேணிகுண்டா வழியாக மலைகளுக்கு இணையாகச் செல்லும் ஒரு முக்கியமான போக்குவரத்து பாதையாகும் ஆகும்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Imperial Gazetteer of India (Volume 19). Oxford: Clarendon Press. 1908. p. 367.
- ↑ 2.0 2.1 Provincial Geographies of India : THE MADRAS PRESIDENCY WITH MYSORE, COORG AND THE ASSOCIATED STATES. Cambridge, UK: Cambridge University Press. 1913. p. 20.
- ↑ 3.0 3.1 3.2 Murty, M. L. K. (2003). Comprehensive History and Culture of Andhra Pradesh: Pre- and protohistoric Andhra Pradesh up to 500 BC. Hyderabad: Orient Blackswan. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125024750.
- ↑ 4.0 4.1 4.2 Students' Britannica India, Volume 4. New Delhi: Encyclopædia Britannica (India). 2000. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780852297605.
- ↑ "Palkonda Hills". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 28 June 2013.
- ↑ "Jerdon's Courser: A Precious Rarity". India's Dangered. பார்க்கப்பட்ட நாள் 28 June 2013.
- ↑ Accounts and Papers of the House of Commons. United Kingdom: Parliament. House of Commons. 1862. p. 230.
- ↑ "Work begins on new rail line in AP". http://www.thehindubusinessline.in/2002/12/28/stories/2002122801200901.htm.