ஜெர்டன் கல்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெர்டன் கல்குருவி
JC PJ.jpg
Camera trap photograph
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Charadriiformes
குடும்பம்: Glareolidae
பேரினம்: Rhinoptilus
இனம்: R. bitorquatus
இருசொற் பெயரீடு
Rhinoptilus bitorquatus
(Blyth, 1848[2])
Rhinoptilus bitorquatus range.png
Specimen records in grey and current distribution in red.
வேறு பெயர்கள்

Cursorius bitorquatus
Macrotarsius bitorquatus

ஜெர்டன் கோர்சர் (Jerdon's courser) என்பது உலகில் காணப்படும் அரிய பறவைகளில் ஒன்று ஆகும். 1900 ஆண்டு முதல் எவர்கண்ணுக்கும் தென்படாததால் இப்பறவை முற்றிலும் அழிந்துவிட்டதாக கருதப்பட்டுவந்தது. ஆயினும் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. [3]தற்போது ஆந்திராவில் எஞ்சி இருக்கும் இந்தப் பறவைக்கு தெலுங்கில் "கலிவிக்கோடி" என்ற பெயர் இருந்தாலும், பறவையியளாளர் தாமஸ் சி. ஜெர்டன் நினைவாக இப்பறவைக்கு வைக்கப்பட்ட ஜெர்டன் கோசர் என்ற பெயரே பறவையியளாளர் மத்தியில் நிலவுகிறது. இந்தியாவில் ஆந்திரப்பிரதேசத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சில இடங்களில் மட்டுமே இருப்பது அறியப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவை இளஞ்சிவப்பான பழுப்புவண்ண இறகுகளும், அகன்ற வெள்ளி மாலை சூட்டியது போன்ற கழுத்தும் கொண்டிருக்கும். இதன் முகவாய் கட்டையும், தொண்டையும் வெண்மையாகக் காணப்படும். வயிற்றுப்பகுதி சாம்பல் வெண்மையிலும், வால் இறகுகள் கருமைபடிந்த வெண்ணிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rhinoptilus bitorquatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2013). பார்த்த நாள் 26 November 2013.
  2. Blyth, J. A. S., XVII:254
  3. Bhushan, B (1986). "Rediscovery of the Jerdon's Courser Cursorius bitorquatus". J. Bombay Nat. Hist. Soc. 83: 1–14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்டன்_கல்குருவி&oldid=2677181" இருந்து மீள்விக்கப்பட்டது