சைலேரு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைலேரு ஆறு (Sileru River) என்பது சபரி ஆற்றின் கிளை நதியாகும். இது ஆந்திராவில் உருவாகிறது. இந்த ஆறு சபரியுடன் இணைவதற்கு முன்பு ஒடிசா வழியாகவும் பாய்கிறது. சபரி ஆறு கோதாவரி ஆற்றில் கலப்பதற்கு முன்னர் ஆந்திர மாநிலத்தின் எல்லையைக் கடந்து செல்கிறது.[1] சைலேரு மேல் பகுதியில் மச்குந்த் என்று அழைக்கப்படுகிறது.

நீர் ஆற்றல் திறன்[தொகு]

சைலேரு ஆற்றில் நீர் மின்சார உற்பத்திக்கான பெரும் சாத்தியம் உள்ளது. இது மச்குந்த் (120 மெகாவாட்), பலிமேலா (510 மெகாவாட்), மேல் சிலேரு (240 மெகாவாட்), டோன்கராய் (25 மெகாவாட்) மற்றும் லோயர் சிலேரு ஹைட்ரோ (460 மெகாவாட்) மின் திட்டங்களை நிர்மாணிப்பதன் மூலம் கணிசமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] சித்ரகொண்டா (60 மெகாவாட்) நீர்மின் திட்டம் பலிமேலா மண் அணையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது மண் அணையின் குறுக்கே கிடைக்கும் வசதியினைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.[3]

நீர்ப்பாசன திறன்[தொகு]

பலிமேலா அனல்மின் நிலையத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒடிசாவில் உள்ள சபரியின் துணை நதியான பொட்டேறு பகுதியில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் கோதாவரி வடிநிலத் தேவைக்காகப் பிரதான கோதாவரி ஆற்றில் குறைவான நீர் பயன்பாட்டுக் காலங்களைத் தவிர மற்ற மின் நிலையங்களிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நீர்பாசன தேவைகளுக்குப் பயன்படுவதில்லை. உத்தராந்திரா பகுதியானது, சைலேறு ஆற்றுப் படுகையில் உள்ள நீர் சேமிப்புக் கிடங்கிலிருந்து வற்றாத நீர் வழங்கல் மூலம் பெரும் பாசனத் திறனை உருவாக்க முடியும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நடுப்பகுதி நிலங்கள், சைலேறு நதி நீரை டோங்கராய் நீர்த்தேக்கத்திலிருந்து (310 மீ எம்.எஸ்.எல் ) கிழக்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கி 35 குகை மூலம் திருப்பி விடுவதன் மூலம் அதிக நீர் விநியோகத்தைப் பெறலாம்.[4] இதேபோல், விசாகப்பட்டினம் மாவட்டம், விஜயநகரம் மாவட்டம் மற்றும் சிறீகாகுளம் மாவட்டத்தின் நடுப்பகுதி நிலங்கள்,சைலேறு நதி நீரை குண்டவாடா வெயிலிலிருந்து (மேல் சைலேறு மின் நிலையத்தின் தலைமைப் பணிகள்) கிழக்கு நோக்கி 410 மீ எம்.எஸ்.எல்-ல் 30 அமைப்பதன் மூலம் அதிக நீர் விநியோகத்தைப் பெறலாம்.[5] பருவமழை இல்லாத மாதங்களில் போலவரம் நீர்த்தேக்கத்தில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதபோது, கிழக்கு நோக்கித் திருப்பிய சைலேறு ஆற்றின் நீரை, போலவரம் இடதுகரை கால்வாய்க்கும், விசாகப்பட்டினம் நகரின் தொடர்ச்சியான குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தலாம்.

கீழ் சிலேறு அனல்மின் நிலையத்திலிருந்து திறக்கப்படும் தண்ணீரைப் புவியீர்ப்பு மூலம் 70 கி. மீ. நீளச் சுரங்கப்பாதை அமைத்து ஏலேறு நீர்த்தேக்கத்திற்குத் திருப்பி விடலாம். இதனால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கூடுதல் பாசனத்தை உருவாக்கலாம். கீழ் சிலேறு மின் நிலையத்தால் வெளியிடப்படும் தண்ணீரின் ஒரு பகுதி, சிலேறு மற்றும் சபரி படுகையில் உள்ள திட்டமிடப்பட்ட கீழ் சிலேறு பாசனத் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கனிதி சமநிலை நீர்த்தேக்கம்
  • ஜலாபுட் அணை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைலேரு_ஆறு&oldid=3556114" இருந்து மீள்விக்கப்பட்டது