கவுந்தியா வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 13°01′30″N 78°38′42″E / 13.02500°N 78.64500°E / 13.02500; 78.64500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுந்தியா வனவிலங்கு சரணாலயம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Andhra Pradesh - Landscapes from Andhra Pradesh, views from Indias South Central Railway (77).JPG
கவுந்தியா வனவிலங்கு சரணாலயத்தின் பகுதி
Map showing the location of கவுந்தியா வனவிலங்கு சரணாலயம்
Map showing the location of கவுந்தியா வனவிலங்கு சரணாலயம்
ஆந்திராவில் கவுந்தியா வனவிலங்கு சரணாலய அமைவிடம்
அமைவிடம்ஆந்திரப்பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்சித்தூர்
ஆள்கூறுகள்13°01′30″N 78°38′42″E / 13.02500°N 78.64500°E / 13.02500; 78.64500[1]
பரப்பளவு357.6 km2 (88,400 ஏக்கர்கள்)
நிறுவப்பட்டதுதிசம்பர் 1990
நிருவாக அமைப்புஆந்திர வனத்துறை

கவுந்தியா வனவிலங்கு சரணாலயம் (Koundinya Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திராவில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயமும் யானைகள் வாழிடம் ஆகும். ஆசிய யானைகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் ஆந்திராவில் உள்ள ஒரே சரணாலயம் இதுவாகும். இங்கு யானைகள் அண்டை பகுதிகளிலிருந்து 200 ஆண்டுகளுக்குப் பின்பு குடியேறிய பகுதியாகும்.[2]

வரலாறு[தொகு]

கவுந்தியா என்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு யானைகள் திரும்பிய பகுதி. கடந்த தசாப்தத்தில், யானைகள் முன்பைவிட அதிகமாகக் குடியேறியுள்ளன. 1983 முதல் 1986 வரை, ஒரு கணிசமான தொகையிலான யானைகள் காணப்படும் தமிழ்நாட்டின் அன்கேல்-ஓசூர் காடுகளிலிருந்தும் கருநாடகத்தில் உள்ள பன்னேருகட்டாவிலிருந்தும் தங்களுடைய மாற்று வாழிடம் நோக்கி தமது இடப்பெயர்வு பயணத்தைத் தொடங்கின. முப்பத்தொன்பது யானைகள், யானைகளே இல்லாத ஆந்திர மாநிலக் காடுகளுக்குச் சென்றன. இந்நிகழ்வு 1990 திசம்பரில் இச்சரணாலயத்தை அரசாங்கம் அமைக்க வழிவகுத்தது. இன்று சுமார் 72 யானைகள் உள்ளன.[2][3]

நிலவியல்[தொகு]

கவுந்தியா சரணாலயத்தின் வாழ்விடம் உயரமான மலைகளுடன் ஆழமான பள்ளத்தாக்குகளால் கரடுமுரடாகக் காணப்படும். இந்த சரணாலயத்தில் வறண்ட இலையுதிர் காடுகள் உள்ளன. இந்த காடுகளில் சிறிய குளங்கள், குட்டைகள் மற்றும் பாலாற்றின் துணையாறுகளான கைண்டின்யா மற்றும் கைகல் பாய்கின்றன. இந்த சரணாலயம் கோலார் பீடபூமி முடிவடையும் இடத்தில் தொடங்கி, தமிழ்நாட்டின் சமவெளிகளில் சரிவான பள்ளத்தாக்குகளையும், மலைப்பகுதிகளையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.[3]

கல்யாண் ரேவு அருவி[தொகு]

கல்யாண ரேவு அருவி

கல்யாணா ரேவு நீர்வீழ்ச்சி (கல்யாண் டிரைவ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமனரின் வடக்கே கவுந்தியா வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இந்த நீர்வீழ்ச்சி பாலமனேரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கைகல் அருவி[தொகு]

கைகல் அருவி என்பது இந்தியாவின் சித்தூர் மாவட்டத்தில் பாலமனருக்கு மேற்கே கவுந்தியா வனவிலங்கு சரணாலயத்தில் அமைந்துள்ள ஓர் நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்வீழ்ச்சி பாலமனேரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும் வி. கோட்டாவிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது பாலமநேர் குப்பம் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

இந்த சரணாலயம் தெற்கு வெப்பமண்டல வறண்ட இலையுதிர் மற்றும் முள் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்குக் காணப்படும் சில முக்கியமான தாவரங்கள் ஆல்பிசியா அமரா, அகாசியா, லாகர்ஸ்ட்ரோமியா, ஃபிகஸ், மூங்கில் மற்றும் சாண்டலம் ஆல்பம் ஆகும். இதில் சந்தனம் மீளுருவாக்கம் செய்யப்பட்ட தாவர இனமாகும்.[1]

இந்த சரணாலயத்தில் முதன்மையாக யானைகள் காணப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 78 ஆகும். அழிவிற்குள்ளான மஞ்சள் தொண்டை சின்னான் இச்சரணாலயத்தில் காணப்படுகிறது. இச்சரணாலயத்தில் காணப்படும் மற்ற விலங்குகள் தேன் கரடி, சிறுத்தை, புள்ளிமான், நாற்கொம்பு மான், கடமான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, குள்ளநரி, காட்டுக்கோழி, இந்திய நட்சத்திர ஆமை மற்றும் தேவாங்கு.[1]

அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள்[தொகு]

சரணாலயம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மனித-விலங்கு மோதல், மிகை மேய்தல், சட்டவிரோத மர சேகரிப்பு. கால்நடைகள் அதிகமாக மேய்ச்சல் காரணமாகக் காட்டில் போதுமான தீவனம் இல்லை என்பதால் அருகில் பயிரிடப்படும் கரும்பு, சோளம் மற்றும் ராகி போன்ற பயிர்கள் யானைகளை ஈர்க்கிறது. இதன் விளைவாக மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. 2002ஆம் ஆண்டு நிலவரப்படி, 42 பேர் யானைகளால் கொல்லப்பட்டுள்ளன. மேலும் 12 யானைகள் உள்ளூர் மக்களால் அமைக்கப்பட்ட மின்சார வேலிகளினால் கொல்லப்பட்டுள்ளன.[2]

சிறீவெங்கடேசுவர தேசிய பூங்காவின் பகுதியான சாமலா பள்ளத்தாக்கில் உள்ள கல்யாணி அணை யானைகளுக்கு நல்ல வாழ்விடமாகும். யானைத் திட்டத்தின் கீழ் கவுந்தியா வனவிலங்கு சரணாலயத்திற்கும் சிறீவெங்கடேசுவர தேசிய பூங்காவிற்கும் இடையே யானைகளுக்கான வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "APFD Website". Forest.ap.nic.in. 21 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Archived copy" (PDF). 2013-04-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2012-07-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)CS1 maint: archived copy as title (link)
  3. 3.0 3.1 "Metro Plus Chennai / Travel : Kaundinya Wildlife Sanctuary". The Hindu. 2005-07-30. 2006-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளிப்புற இணைப்பு[தொகு]