காட்டுக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுக் கோழி
Junglefowl
புதைப்படிவ காலம்:
Late Miocene-Holocene
Stavenn Gallus varius 0.jpg
பச்சைக் காட்டுக் கோழி, (Gallus varius) சேவல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Phasianinae
பேரினம்: Gallus
Brisson, 1760
இனங்கள்
  • Gallus gallus
  • Gallus lafayetii
  • Gallus sonneratii
  • Gallus varius

காட்டுக் கோழி (Junglefowl) என்பது காடுகளில் வாழும் கோழி இனப் பறவையாகும். இவை இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெரிய பறவைகளாகவும், வண்ணமயமான இறகுகளைக் கொண்டு இருக்கும்.

பல பறவைகள்போல இவற்றில் ஆண்பறவைகளான சேவல்கள் முட்டைகளை அடைக்காப்பதில் பங்குவகிப்பதில்லை. பெண் பறவைகளான கோழிகளே இந்தப் பணிகளை செய்கின்றன இந்தக் கோழிகள் உருமறைப்பை செய்யக்கூடியன.

காட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும்.

காட்டுக் கோழிகளில் ஒரு இனமான சிவப்புக் காட்டுக்கோழி தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என்று கருதப்படுகிறது. என்றாலும் வீட்டுக் கோழிகளின் மூதாதையாக சிலர் வெள்ளைக் கானாங்கோழிதான் எனக் கருதுவோரும் உள்ளனர்..[1]

இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப்பறவையாக உள்ளது.

இனங்கள்[தொகு]

காலஸ் பேரினம் யூரேசியா முழுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உருவானது என்று தோன்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M, et al. (2008) Identification of the Yellow Skin Gene Reveals a Hybrid Origin of the Domestic Chicken.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுக்கோழி&oldid=2724634" இருந்து மீள்விக்கப்பட்டது