உள்ளடக்கத்துக்குச் செல்

யானைத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய யானை

யானைத் திட்டம் (Project Elephant) என்பது இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் 1992ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆசிய யானைகளின் பாதுகாப்பில் மாநிலங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் நிதியுதவி வழங்குவதற்காக இந்த திட்டம் துவங்கப்பட்டது. யானைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றின் இடம்பெயர்வு தாழ்வாரங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் யானைகளின் இயற்கை வாழ்விடங்களில் நீண்டகாலம் உயிர்வாழ்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். யானை திட்டத்தின் பிற குறிக்கோள்களாக யானைகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேலாண்மை பற்றிய ஆராய்ச்சியை ஆதரித்தல், யானைகள் பாதுகாப்பு குறித்து உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை, ஏற்படுத்துகின்றன, அயற்சூழலில் வளர்க்கப்படும் யானைகளுக்குக் கால்நடை பராமரிப்பை பணியினை மேம்படுத்துதல் முதலியன.[1] [2]

குறிக்கோள்கள்[தொகு]

யானைத் திட்டமானது 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் ஒரு மைய நிதியுதவி திட்டமாகப் பின்வரும் நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது: [1][2]

 • யானைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் தாழ்வாரங்கள் பாதுகாத்தல்.
 • மனித-விலங்கு மோதலின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்.
 • அயற்சூழலில் வளர்க்கப்படும் யானைகளின் நலன்

செயல்பாடுகள்[தொகு]

நாட்டில் யானைகள் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் முக்கியமாக 16 மாநிலங்கள் / ஒன்றிய பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒரிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் முதலியன இத்திட்டத்தினை செயல்படுத்தும் மாநிலங்களாகும். திட்டத்தின் கீழ் முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு: [1][2]

 • தற்போதுள்ள இயற்கை வாழ்விடங்களின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் யானைகளின் இடம்பெயர்வு வழிகளை மேம்படுத்துதல்
 • யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான அறிவியல் மற்றும் திட்டமிட்ட நிர்வாகத்தின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் காட்டு ஆசிய யானைகளின் சாத்தியமான எண்ணிக்கையினை பாதுகாத்தல்
 • முக்கியமான வாழ்விடங்களில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் முக்கியமான யானை வாழ்விடங்களில் வளர்க்கப்படும் யானைகள் மீதான அழுத்தங்கள் மீதான நடவடிக்கை
 • காட்டு யானைகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் யானைகளின் இயற்கைக்கு புறம்பான மரணத்திற்குக் காரணங்களை ஆராய்தல்;
 • யானை மேலாண்மை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சி;
 • பொதுக் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள்;
 • சுற்றுச்சூழல் வளர்ச்சி
 • கால்நடை பராமரிப்பு
 • யானை மறுவாழ்வு / மீட்பு மையங்கள்

2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, 32 யானை காப்பகங்கள் சுமார் 58,000 சதுர கிலோமீட்டர்கள் (22,000 sq mi) ) வரை பரவியுள்ளது என பல்வேறு மாநில அரசுகளால் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3] பரப்பளவு மற்றும் யானைகளின் எண்ணிக்கையுடன் யானை காப்பக பட்டியல் பின்வருமாறு: [4]

Elephant reserves of Project Elephant in India (2005)
வரிசை எண் பாதுகாப்பக பெயர் சரகம் நிறுவிய ஆண்டு மாநிலம் மொத்தப்பரப்பு (சதுரகிமீ) எண்ணிக்கை
1 மயூர்ஜகர்ணா யானை காப்பகம் கிழக்கு-மத்திய 2002 மேற்குவங்காளம் 414 96
2 சிங்பூம் கிழக்கு-மத்திய 2001 ஜார்கண்டு 4,530 371
3 மயூர்பாஞ் கிழக்கு-மத்திய 2001 ஒரிசா 3.214 465
4 மகாநதி கிழக்கு-மத்திய 2002 ஒரிசா 1,038 464
5 சம்பல்பூர் கிழக்கு-மத்திய 2002 ஒரிசா 427 336
6 பெய்டர்னி கிழக்கு-மத்திய ஒரிசா 1,755 108
7 தெற்கு ஒரிசா கிழக்கு-மத்திய ஒரிசா 1,049 138
8 லெம்ரு கிழக்கு-மத்திய சத்தீசுகாரு 450
9 படால்கோல்-தாமோர்பிங்லா கிழக்கு-மத்திய சத்தீசுகாரு 4,216 138
10 காமெங் காமெங்-சோண்ட்புர் 2002 அருணாச்சல பிரதேசம் 1,892
11 சோனிட்பூர் காமெங்-சோண்ட்புர் 2003 அசாம் 1,420 612
12 டிகிங்-பட்கை கிழக்கு-தெற்கு 2003 அசாம் 937 295
13 தெற்கு அருணாசல் கிழக்கு-தெற்கு அருணாச்சல பிரதேசம் 900+ 129
14 காசிரங்கா-கர்பி ஆங்கலாங் காசிரங்கா 2003 அசாம் 3,270 1,940
15 Dhansiri-Lungding காசிரங்கா 2003 அசாம் 2,740 275
16 இண்டாக்கி காசிரங்கா 2005 நாகலாந்து 202 30
17 சிராங்-ரிபு வடக்கு-பெங்கால்-மெரும் மன்னாசு 2003 அசாம் 2,600 658
18 கிழக்கு டூராசு வடக்கு-பெங்கால்-மெரும் மன்னாசு 2002 மேற்கு வங்காளம் 978 300-350
19 காரோ மலைகள் மேகாலயா 2001 மேகலாய 3,500 1,047
20 காசி மலைகள் மேகாலயா மேகலாய 1,331 383
21 மைசூரு பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2002 கர்நாடகா 6,724 4,452
22 வயநாடு பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2002 கேரளா 1,200 636
23 நீலகிரி பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2003 தமிழ்நாடு 4,663 2,862
24 ராயலா பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2003 அருணாச்சல பிரதேசம் 766 12
25 நிலாம்பூர் பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2002 கேரளா 1,419 281
26 கோயம்புத்தூர் பிரம்மகிர்-நீலகிரி-கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 2003 தமிழ்நாடு 566 329
27 ஆனைமலை ஆனைமலை-நெல்லியம்பதி-மேல் சரகம் 2003 தமிழ்நாடு 1,457 179
28 ஆனமுடி ஆனைமலை-நெல்லியம்பதி-மேல் சரகம் 2002 கேரளா 3,728 1,547
29 பெரியார் பெரியார்-அகஸ்தியமலை 2002 கேரளா 3,742 1,100
30 திருவில்லிபுத்தூர் பெரியார்-அகஸ்தியமலை 2003 தமிழ்நாடு 1,249 638
31 சிவாலிக்[5] வட-மேற்கு 2003 உத்தரகாண்ட் 5,405 1,610
32 உத்தரப்பிரதேசம் வட-மேற்கு 2009 உத்தரப்பிரதேசம் 744
யானை திட்டம் மொத்தம் 69,583 21,370

கணக்கீடு[தொகு]

யானை காப்பகங்களில் வனத்தில் காணப்படும் காட்டு யானைகளைக் கணக்கிடுவதற்கான முதல் பிரத்தியேக பயிற்சி 2005ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை நடத்தப்பட்டது. இந்த பயிற்சி இரண்டு மாதிரி முறைகளைப் பரிசோதிக்கும் விதமாக அமைந்தது. அதாவது; தொகுதி மாதிரி மற்றும் வரி இடைமறிப்பு மாதிரி சாணம் எண்ணிக்கை. பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க யானைத் திட்டம் ஏற்பாடு செய்ததுடன், தலைமை வனவிலங்கு காப்பாளர்கள் மற்றும் கள ஒருங்கிணைப்பாளர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களை நடைபெற்றது. இந்த கணக்கீட்டின்படி 2005ஆம் ஆண்டில் யானைகளின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 21,200ஆக இருந்தது. [4] பின்னர் 2012இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை 28,785 முதல் 31,368 வரை உள்ளது.[2] [3]

வேட்டையாடுவதை கண்காணித்தல்[தொகு]

யானை திட்டத்தில் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதல் 10 யானைக் காப்பகங்களில் CITESஇன் யானைகளைச் சட்டவிரோதமாகக் கொல்லப்படுவதைக் கண்காணித்தல்(MIKE) திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறது. இது CITES இன் COP தீர்மானத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யானை திட்டம் தெற்காசியாவில் 2003இல் பின்வரும் நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது: [1][2]

 • யானைகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவதில் அதன் நிலைகளையும் போக்குகளையும் அளவிட.
 • இந்த போக்குகளில் மாற்றங்களைக் காலப்போக்கில் தீர்மானிக்க.
 • இந்த மாற்றங்களுக்குக் காரணமான அல்லது தொடர்புடைய காரணிகளைத் தீர்மானித்தல் மற்றும் குறிப்பாக CITES க்கு நாடுகளின் மாநாடு எடுக்கும் எந்தவொரு முடிவுகளின் விளைவாகக் கவனிக்கப்பட்ட போக்குகள் எந்த அளவிற்குக் கவனிக்கப்படுகின்றன என்பதை மதிப்பீடு செய்ய முயலவும்.

குறிப்பிட்ட MIKE ரோந்து படிவத்தில் அனைத்து தளங்களிலிருந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு, டெல்லியில் உள்ள தெற்காசியா திட்டத்திற்கான துணை பிராந்திய ஆதரவு அலுவலகத்தில் சமர்ப்பித்தல். இவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சகத்திற்கு உதவுகிறார்கள்.

ஆராய்ச்சி[தொகு]

கட்டாக்கின் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ) உதவியுடன் யானை திட்டம் 36 மாத ஆராய்ச்சி (2003-04 முதல் 2006-07 வரை) செய்தது. இந்த ஆராய்ச்சியின் கீழ் யானைகளால் விரும்பப்படாத அதிக நெல் விளைச்சல் வகைகளை மேம்படுத்துதல்; யானைகளால் பாதிப்பு ஏற்படாத உணவு தானிய-ஆதார சேமிப்புத் தொட்டிகளை உருவாக்குதல்; மற்றும் யானை விரட்டிகளை வளர்ப்பது. ஒரிசா மற்றும் அசாமில் உள்ள சி.ஆர்.ஆர்.ஐ யின் ஆராய்ச்சி நிலையங்களில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. "வளர்க்கப்படும் யானைகளில் நோய் மேலாண்மை" மற்றும் "ஆசிய யானை பற்றிய உடற்கூறியல் ஆய்வுகள்" குறித்து அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இரண்டு திட்டங்கள் (2003-04 முதல் 2006-07 வரை) நடத்தப்பட்டன. ராஜாஜி தேசிய பூங்காவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் குஜ்ஜார் இடமாற்றம் செய்யப்பட்டதன் தாக்கத்தை ஆய்வு செய்ய யானை திட்டத்தில் ஓர் சிறிய திட்டத்தை (2004-05 முதல் 2005-06 வரை) ஒப்படைத்தது. இந்தியப் புள்ளிவிவர நிறுவனம் மேற்கு வங்க வனத்துறை 2005ஆம் ஆண்டில் மேற்கொண்ட யானைகளின் மாதிரி அடிப்படையிலான கணக்கீட்டிற்கு உதவியது.[1]

யானை திட்டம் சுற்றுச்சூழல் சுற்றுலாவைப் பயன்படுத்தி, இதன் மூலம் கிடைக்கும் வருவாயினைக் கொண்டு யானைகளின் பெருக்கத்தை மேம்படுத்துவதை ஊக்கப்படுத்தியுள்ளது. கேரள வேளாண் பல்கலைக்கழகம், திருச்சூர் மற்றும் குவஹாத்தியின் அசாம் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உதவியுடன் காட்டு மற்றும் வளர்ப்பு யானைகளைக் கையாளும் முறைகள் குறித்த புத்தாக்கப் பயிற்சியினை கால்நடை மருத்துவர்களுக்கான ஏற்பாடு செய்து வருகிறது. மைக்ரோசிப்களைப் பயன்படுத்தி வளர்ப்பு யானைகளைப் பதிவு செய்வதற்கான திட்டத்தை யானைத் திட்டம் தொடங்கியுள்ளது. அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட யானைகளுக்கு நுண்சில்லு பொருத்தப்பட்டுள்ளன. இந்த நோக்கத்திற்காகத் தேவையான பயிற்சியை யானைத் திட்டம் ஏற்பாடு செய்துள்ளதுடன், தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கும் நுண்சில்லு மற்றும் நுண்சில்லிலுள்ள தரவுகளை தரவிறக்கம் செய்யும் கருவிகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. [1][2]

யானை திட்டம் பற்றி மேலும்[தொகு]

 • இந்தியாவில் யானைப் பாதுகாப்பு குறித்து 58 நிமிட காணொளி ஆவணப்படமான "லிவிங் வித் தி ஜயண்ட்ஸ்" யானைத் திட்டம் தயாரித்துள்ளது

மேலும் காண்க[தொகு]

 • மேளா ஷிகர்
 • கெட்டா

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Project Elephant". wildlifeofindia.org. Archived from the original on 12 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Project Elephant". Government of India. Archived from the original on 14 November 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
 3. 3.0 3.1 "Elephant Reserves". ENVIS Centre on Wildlife & Protected Areas. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
 4. 4.0 4.1 "Census population 2005" (PDF). Note on Project Elephant. Ministry of Environment and Forests. 2007. Archived from the original (PDF) on 12 March 2012. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
 5. "Shivakik Elephant Reserve" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைத்_திட்டம்&oldid=3782375" இலிருந்து மீள்விக்கப்பட்டது