உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், கட்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம்

தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம் (National Rice Research Institute) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் கட்டாக்பாராதீப் சாலையில் உள்ள பிதயதார்புர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் அங்கீகரித்த முதன்மையான தேசிய ஆராய்ச்சி நிறுவன்ங்களில் இதுவும் ஒன்றாகும். ஆராய்ச்சி நிலையம் தோராயமாக 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆராய்ச்சிகள்

[தொகு]

இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு வகையான கீழ்காணும் துறைகளை இணைத்து அரிசி ஆராய்ச்சிகள் மேற்கோண்டு பல ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இங்கு மேற்கொள்ளப்படும் அரிசி ஆராய்ச்சிகளை கீழ்கண்டவாறு பட்டியலிடலாம். ஆராய்ச்சி பிரிவுகள்

  1. பயிர் முன்னேற்றம்
    1. மரபணு வளங்கள்
    2. தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல்
  2. பயிர் உற்பத்தி
    1. உழவியல்
    2. மண் அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல்
    3. விவசாய பொறியியல்
  3. பயிர் பாதுகாப்பு
    1. பூச்சியியல்
    2. தாவர நோய்க்குறியியல்
  4. உயிர் வேதியியல், தாவர செயல் இயல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
  5. சமூக அறிவியல்
    1. விவசாய பொருளாதாரம்
    2. விவசாய புள்ளியியல்
    3. விரிவாக்கம், தொடர்பாடல் மற்றும் பயிற்சி

நிறுவனம்

[தொகு]

ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு துறைத் தலைவரின் தலைமையில் இயங்குகிறது. கயேந்திரகத்கார் ஆணையத்தின் அறிக்கையை அமுல்படுத்திய பின்னர் விஞ்ஞானிகளுக்கு இங்கு வழங்கப்படும் சம்பளம் பெரிதும் மேம்பட்டுள்ளது. . பெரும்பாலான விஞ்ஞானிகள் வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளனர்.

குறிப்பிடத்தக்க பணியாளர்கள்

[தொகு]

*முன்னாள் இயக்குநர்கள்

    • கிருட்டிணசுவாமி ராமையா – நிறுவனர் மற்றும் இயக்குநர்[1]
    • டாக்டர் ஆர்.எச்.ரிச்சாரியா -
    • டாக்டர் எசு.ஒய். பத்மனாபன், தாவர நோயியல் அறிஞர்.
  • முதுநிலை நிர்வாக அலுவலர்
    • எசு.கே. சின்கா
  • விஞ்ஞானிகள்:
    • டாக்டர் எசு.எசு. செயின் - முதுநிலை தாவர நோயியல் அறிஞர் மற்றும் பூஞ்சையியல் அறிஞர் ( ஆய்வகத்தில் காளான் வளர்ப்பு முறை முன்னோடி விஞ்ஞானி).
    • டாக்டர் ஆர்.என். மிசுரா – மரபியலர்
    • டாக்டர் பி.கே. ராவ் – அரிசி வளர்ப்பாளர் (ஊக்கர் விருது பெற்றவர்)
    • டாக்டர் எம். சீத்தாராமன்- மரபியலர்
    • டாக்டர் யே.பி குல்சிரெசுத்தா - பூச்சியியலர்
    • டாக்டர் தேவ்தத் – தாவர நோயியலர்
    • டாக்டர் பி.கே. சிங் – கடற்பாசியியல் அறிஞர்
    • டாக்டர் எசு.என். ரத்தோ – மரபியலர் மற்றும் தாவர வளர்ப்பாளர்
    • டாக்டர் சிறீ கோபால் சர்மா
    • டாக்டர் . ஓங்கார் நாத் சிங் – விதை மேம்பாட்டுப் பிரிவு (பிரிவின் தலைவர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gramene". Gramene. 2015. பார்க்கப்பட்ட நாள் April 3, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]