வம்சதாரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வம்சதாரா ஆறு என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில்  கிழக்கு நோக்கி பாயும் ஒரு முக்கியமான  ஆறு  ஆகும். இது ருசிகுல்ய  ஆறு மற்றும் கோதாவரி ஆறுகளுக்கிடையே. பாய்கிறது.

இந்த  ஆறு ஒடிசா மாநிலம் காலாகன்டி மாவட்டம் ராம்பூர் மற்றும் ராயகடா மாவட்டம் காலகண்டி ஆகிய இடங்களில் தொடங்குகி கிழந்கு நோக்கி 254 கி.மீ தூரம் ஓடி வருகிறது. பின்னர் ஆந்திரப்பிரதேச மாநிலம் கலிங்கப்பட்டினம் என்ற இடத்தில் வங்காள வரிகுடா கடிலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீர்பிடிப்புப் பகுதி 10,830 சதுர கிலோமீட்டர் ஆகும்

முகலிங்கம் மற்றும் சிறீகாகுளம் மாவட்டத்தின் கலிங்கப்பட்டினம் ஆகியவை இந்த ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாகும்

மகேந்திர தனாயா  [1] வம்சதாரா ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். இது ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில் உற்பத்தி ஆகி பின்னர் ஆந்திர மாநிலம் கோட்டா அணைக்கட்டில் இணைகிறது.   இந்த ஆற்றின் குறுக்கே ரேகுலப்பாடு என்ற இடத்தில் ஆற்றைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்த புதிய அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுவருகிறது.[2]

வம்சதாரா திட்டம்[தொகு]

பொட்டெபள்ளி ராஜகோபால ராவ் செயல்திட்டம் இந்த வம்சதாரா ஆற்றில் கட்டப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது .[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சதாரா_ஆறு&oldid=2337084" இருந்து மீள்விக்கப்பட்டது