உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்மாச்சலம் மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 17°45′39″N 83°15′59″E / 17.760932°N 83.266455°E / 17.760932; 83.266455
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்மாச்சலம் மலைத்தொடர்
சிம்மாச்சலம் மலைகள்
உயர்ந்த புள்ளி
உயரம்377 m (1,237 அடி)
ஆள்கூறு17°45′39″N 83°15′59″E / 17.760932°N 83.266455°E / 17.760932; 83.266455
பெயரிடுதல்
தாயகப் பெயர்சிம்மாச்சலம் கொண்டாலு Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
மூலத் தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

சிம்மாச்சலம் மலைத்தொடர் (Simhachalam Hill Range), சிம்ஹாசலம் மலைகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவன, தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகருக்கு அருகில் உள்ள ஒரு உயர்ந்த மலைத்தொடர் (377 மீ) ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைத்தொடர்களில் ஒன்றாகும்.[1]

நிலவமைப்பு[தொகு]

சிம்மாச்சலம் மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அமைப்பின் கிழக்குத் தொடர்களின் ஒரு பகுதியாகும். இந்த மலைகள் 32 கி.மீ நீளமுடைய பகுதியில் அமைந்துள்ளன.[2]

சிறப்பு[தொகு]

சிம்மாச்சலம் மலைத்தொடருக்கு வளமான வரலாறு உண்டு. இங்குப் புகழ்பெற்ற வராக லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. சாளுக்கியர் கால இராதா மாதவ சுவாமி கோவில் மற்றும் சில பழைய புத்த நினைவுச்சின்னங்களும் இங்குக் காணப்படுகின்றன.[3]

பக்தி[தொகு]

மலைகளில் வராக இலட்சுமி நரசிம்மர் கோயில் மற்றும் பிற சிறிய கோயில்கள் உட்படப் பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கிரி பிரதக்ஷிணா என்று அழைக்கப்படும் கிரிவலம் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் இந்து பக்தர்கள் மலையைச் சுற்றி 35 கி. மீ. நடந்து செல்கிறார்கள்.[4]

அருகமை நகரங்கள்[தொகு]

மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தின் சுற்றுப்புறங்கள் அடவிவரம், அக்கையபாலம், பாலையா சாஸ்திரி நகரமைவு, கோபாலபட்டினம், அனுமந்தவாகா, கைலாசபுரம், மாதவதாரா, நரசிம்ம நகர், பிரகலாதபுரம் மற்றும் சீதம்மாதாரா .

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

விசாகப்பட்டினம் நகரின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சிம்மாச்சலம் மலைகள் பாதுகாத்தன[தெளிவுபடுத்துக] மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகம் 74 வகையான தாவரங்களையும் 200 விலங்கினங்களையும் கண்டறிந்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Data, Info (14 April 2019). "Latitude". பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
  2. Writer, Editor (21 June 2020). "Geography". பார்க்கப்பட்ட நாள் 26 June 2020. {{cite web}}: |first= has generic name (help)
  3. Susarla, Ramesh (11 July 2020). "Geography". பார்க்கப்பட்ட நாள் 12 July 2010.
  4. News, City (8 July 2017). "Devotional". பார்க்கப்பட்ட நாள் 7 July 2020. {{cite web}}: |last= has generic name (help)
  5. Bhattacharya, Sumith (16 May 2014). "Flora". பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.