ஆகத்து 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிஅழிப்பு: ksh:16. Aujußß |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:އޮގަސްޓު 16 |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[da:16. august]] |
[[da:16. august]] |
||
[[de:16. August]] |
[[de:16. August]] |
||
[[dv:އޮގަސްޓު 16]] |
|||
[[el:16 Αυγούστου]] |
[[el:16 Αυγούστου]] |
||
[[en:August 16]] |
[[en:August 16]] |
16:26, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகஸ்ட் 16 கிரிகோரியன் ஆண்டின் 228வது நாளாகும். நெட்டாண்டுகளில் 229வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 137 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1513 - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை வென்றான்.
- 1780 - தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகாளை வென்றனர்.
- 1819 - இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
- 1865 - 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
- 1868 - பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 - ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
- 1945 - சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
- 1964 - தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியகற்றப்பட்டார்.
- 1987 - அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
- 2005 - வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
- 2006 - இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1821 - ஆர்தர் கெய்லி, கணிதவியலர் (இ. 1895)
- 1872 - அ. மாதவையா, தமிழ் முன்னோடி எழுத்தாளர் (இ. 1925)
- 1933 - தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2008)
இறப்புகள்
- 1705 - ஜேக்கப் பெர்னூலி, சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், அறிவியலாளர் (பி. 1654)
- 1886 - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், (பி. 1836)
- 1971 - இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர், (பி. 1906)
- 1977 - எல்விஸ் பிறீஸ்லி, அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1935)
- 2003 - இடி அமீன், உகாண்டா சர்வாதிகாரி (பி. 1924)
சிறப்பு நாள்
- பராகுவே - சிறுவர் நாள்