உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டமங்கலம்

ஆள்கூறுகள்: 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°E / 11.917660; 79.684567
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டமங்கலம்

Kandamangalam

—  ஊராட்சி ஒன்றியம்  —
கண்டமங்கலம் நகரின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45ஏ
கண்டமங்கலம் நகரின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45ஏ
கண்டமங்கலம்
இருப்பிடம்: கண்டமங்கலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°E / 11.917660; 79.684567
நாடு  இந்தியா
பகுதி தொண்டை நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் விக்கிரவாண்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

ரவிக்குமார்

சட்டமன்றத் தொகுதி வானூர்
சட்டமன்ற உறுப்பினர்

எம். சக்கரபாணி (அதிமுக)

மக்கள் தொகை 5,460 (2011)
கல்வியறிவு 83.65% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
சென்னையிலிருந்து தொலைவு 170 கி.மீ (106 மைல்)
புதுச்சேரியிலிருந்து தொலைவு 17 கி.மீ (11 மைல்)
விழுப்புரத்திலிருந்து தொலைவு 22 கி.மீ (14 மைல்)
கடலூரிலிருந்து தொலைவு 26 கி.மீ (16 மைல்)
குறியீடுகள்


கண்டமங்கலம் (Kandamangalam), தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] இந்நகரம், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்நகரத்தின் நான்கு திசைகளும் பாண்டிச்சேரி மாநிலத்தின் நகரங்களால் சூழப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

திருநாரிசுவரர் கோயில் (சிவன் கோயில்)

கண்டமங்கலம் எனும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீ கண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. கண்டராதித்த மதுராந்தகன் என்ற செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தம சோழனின் தந்தையும், மேறகெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வூரில் சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில்கள் இரண்டும் என மூன்று கோயில்கள் இருந்துள்ளன. சிவன் கோயில் திருநாரிஸ்வரம் என வழங்கப்பட்டது. திருநாரிஸ்வரத்து மஹாதேவர் என இறைவன் வழங்கப்பட்டார். இரண்டு விஷ்ணு கோயில்களில் ஒன்று செய்தாங்கி விண்ணகர் என்றும் செயந்தாங்கி விண்ணகரப் பெருமான் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. திருவாய்பாடி ஆழ்வார் என்ற மற்றொரு விஷ்ணு கோயிலின் பெயராகும்.

கோயிலை முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. ஸ்ரீ பாதக்கிரம வித்தன் மகன் சீராளன் என்பவன் கோயிலில் விளக்கொஜக்க சபையிடம் ஆடுகளை அளித்ததை இராஜராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் மிகச் சிறியது கருவறை, அர்த்தமண்டபம் மட்டுமே கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சிறிய லிங்கமொன்றையும், முகலிங்கமாக காணப்படுகிறது. சதுரமான கருவறை, கருவறையின் தென்புற அதிஷ்ட்டானத்தில் கல்வெட்டுள்ளது. பராந்தகன் காலக் கோயிலாக இதனைக் கொள்ளலாம்.[5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
86%
முஸ்லிம்கள்
10%
கிறிஸ்தவர்கள்
2%
சைனர்கள்
0%
சீக்கியர்கள்
0%
பௌத்தர்கள்
0%
மற்றவை
2%
சமயமில்லாதவர்கள்
0%

இந்நகரத்தில் வன்னிய குல சத்திரிய (வன்னிய கவுண்டர்) சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர், அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர்கள், நாயுடுகள், செட்டியார்கள், ரெட்டியார்கள், குயவர்கள் மற்றும் வண்ணார்கள் ஆகிய சமூக மக்கள் வாழ்கின்றனர். இங்கு கணிசமான அளவில் இசுலாம் மதத்தினரும் வாழுகின்றனர்.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கண்டமங்கலம் நகரத்தில், 1300 குடும்பங்கள் வசிக்கின்றனர் மற்றும் இதன் மக்கள் தொகை 5460 ஆகும். இதில் 2736 ஆண்கள் மற்றும் 2724 பெண்கள் ஆகும்.[6]

கண்டமங்கலம் நகரத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 566 ஆகும், இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 10.37% ஆகும். கண்டமங்கலம் நகரத்தின் சராசரி பாலின விகிதம் 996 ஆகும் மற்றும் குழந்தை பாலின விகிதம் 952 ஆகும், இது தமிழ்நாட்டின் சராசரியான 943-ஐ விட அதிகம்.

கண்டமங்கலம் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 83.65% ஆக இருந்தது, இதில் ஆண்களின் கல்வியறிவு 89.70% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77.61% ஆகவும் உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°55′04″N 79°41′04″E / 11.917660°N 79.684567°E / 11.917660; 79.684567 ஆகும்.[7] தக்காண இந்தியாவின் தென் கிழக்குப்பகுதியிலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரி, இதன் வங்கக் கடற்சார்ந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிருந்து சென்னை சுமார் 170 கி.மீ. தொலைவிலும், திருச்சி 190 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரி சுமார் 17 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் 22 கி.மீ. தொலைவிலும், கடலூர் 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

இருப்புப்பாதை குறுக்கிடம்

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 45ஏ, கண்டமங்கலம் வழியாக செல்கிறது. இங்கிருந்து புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் செல்கின்றன. புதுச்சேரியிலிருந்து - மதகடிப்பட்டு, திருக்கனூர், மடுகரை, சன்னியாசிகுப்பம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் உள்ளூர் பேருந்துகளும் கண்டமங்கலம் நகரின் வழியாக செல்கிறது. புதுச்சேரியிலிருந்து - பெங்களூர், சேலம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இந்நகரின் வழியே செல்கின்றது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 45ஏ சாலையானது, ஒரே சாலையில் இருதிசைகளிலும் வாகனம் சென்று கொண்டிருந்தது. தற்போது இது நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியானது 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[8]

தொடருந்து[தொகு]

சின்னபாபுசமுத்திரம் தொடருந்து நிலையம்

கண்டமங்கலம் நகரின் எல்லையை பகிர்கின்ற சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இது கண்டமங்கலத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையத்திலிருந்து புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு தினசரி தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் மங்களூரு, திருச்சிராப்பள்ளி, பெங்களூரு, கொல்கத்தா, புது தில்லி, புவனேஷ்வர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தொடருந்துகள் செல்கின்றன.

வானூர்தி[தொகு]

இந்நகரத்தின் அருகிலுள்ள விமான நிலையம், 17 கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் ஆகும்.

முக்கிய அலுவலகங்கள் & கட்டிடங்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி
  • வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி
  • அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
  • அரசினர் மாணவியர் விடுதி(ஆ.தி)

அரசு அலுவலகங்கள்[தொகு]

அரசு மருத்துவமனை
  • அரசு மருத்துவமனை
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
  • வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகம்
  • கிராம நிர்வாக அலுவலகம்
  • வட்டார வேளாண்மை விரிவாக்க மையம்
  • வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்
  • இ-சேவை மையம்
  • நியாய விலைக்கடை
  • பி-6 காவல் நிலையம்
  • இளமின் பொறியாளர் அலுவலகம்
  • சார்பதிவாளர் அலுவலகம்
  • தபால் நிலையம்

வங்கிகள்[தொகு]

  • சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா & ஏ.டி.எம்
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி & ஏ.டி.எம்
  • விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி

திருமண மண்டபங்கள்[தொகு]

  • வள்ளி திருமண மண்டபம்
  • கிருஷ்ணாலயா திருமண மண்டபம்
  • கீர்த்திஸ்ரீ திருமண மண்டபம்
  • ஜீவா திருமண மண்டபம்
  • கே. ஆர். எஸ் திருமண நிலையம்
  • எம். பி திருமண நிலையம்

திரையரங்கம்[தொகு]

  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா திரையரங்கம்

வழிபாட்டுத்தலங்கள்[தொகு]

இந்து[தொகு]

  • ஸ்ரீ திரிபுர சுந்தரி ஸ்ரீ திருநாரீசுவரர் ஆலயம் (சோழர் கட்டிய சிவன் கோயில்)
  • அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம்
  • விநாயகர் கோயில்
  • முருகன் கோயில்
  • தவத்திரு ஶ்ரீ குருசாமி அம்மையார் ஜீவா சமாதி

இசுலாம்[தொகு]

ஜாமிஆ மஸ்ஜித் & மத்ரஸா
  • ஜாமிஆ மஸ்ஜித் & மத்ரஸா பள்ளிவாசல், கண்டமங்கலம்

கிறித்துவம்[தொகு]

  • சி. எஸ். ஐ குட் ஷெப்பர்ட் சர்ச், கண்டமங்கலம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் ஆர். லட்சுமணன்
மக்களவை உறுப்பினர் து. இரவிக்குமார்

கண்டமங்கலம் நகரமானது, வானூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த சக்கரபாணி வென்றார்.

2024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை, (திமுக கூட்டணி ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-ஐச் சேர்ந்த து. இரவிக்குமார் வென்றார்.

பொதுவான தகவல்கள்[தொகு]

கண்டமங்கலம் நகரத்தின் நான்கு திசைகளும் பாண்டிச்சேரி மாநிலத்தின் நகரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நகரில் வாழும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து ஆகிய வசதிகள் மிக எளிமையாக கிடைக்கின்றது. கண்டமங்கலம் நகரின் எல்லையை பகிர்கின்ற, 1 கி.மீ தொலைவில் உள்ள அரியூரில், சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவை உள்ளது, மேலும் 5 கி.மீ தொலைவில் உள்ள மதகடிப்பட்டில், சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தொழிற்நுட்பக் கல்லூரி ஆகியவை உள்ளது. அருகில் உள்ள நகரங்களான திருவண்டார்கோவில், திருபுவனை, சன்னியாசிக்குப்பம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளும், திருபுவனையில் பிப்டிக் தொழிற்பூங்காவும் அமைந்துள்ளது.

கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதி[தொகு]

கண்டமங்கலம் ஆனது 1967 ஆம் ஆண்டு முதல் 2006 வரை ஒரு சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக வானூர் தொகுதி உருவாக்கப்பட்டது.

வானிலை மற்றும் காலநிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், கண்டமங்கலம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.8
(83.8)
30.6
(87.1)
32.9
(91.2)
34.7
(94.5)
37.1
(98.8)
37.1
(98.8)
34.5
(94.1)
34.8
(94.6)
34.2
(93.6)
32.0
(89.6)
29.5
(85.1)
28.2
(82.8)
32.87
(91.16)
தாழ் சராசரி °C (°F) 20.4
(68.7)
20.8
(69.4)
22.7
(72.9)
25.6
(78.1)
27.0
(80.6)
26.9
(80.4)
25.9
(78.6)
25.3
(77.5)
24.9
(76.8)
22.1
(71.8)
22.5
(72.5)
21.2
(70.2)
23.78
(74.8)
மழைப்பொழிவுmm (inches) 20
(0.79)
7
(0.28)
6
(0.24)
16
(0.63)
40
(1.57)
45
(1.77)
80
(3.15)
149
(5.87)
135
(5.31)
222
(8.74)
216
(8.5)
110
(4.33)
1,046
(41.18)
[சான்று தேவை]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "கண்டமங்கலம் வரலாறு".
  6. Kandamangalam Population - Viluppuram, Tamil Nadu
  7. "Imperial Gazetteer of India ..." google.com.
  8. Villupuram—Nagapattinam NH to open after Jan 2025 the new indian express (29 ஜுலை, 2023)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டமங்கலம்&oldid=4049678" இலிருந்து மீள்விக்கப்பட்டது