மதகடிப்பட்டு
Appearance
மதகடிப்பட்டு Madagadipet | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | புதுச்சேரி |
வட்டம் | வில்லியனூர் |
நகராட்சி | மண்ணாடிப்பட்டு |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,253 |
மொழி | |
• அலுவல் மொழி | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | PY-05 |
மதகடிப்பட்டு (Madagadipet) இந்தியாவின், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வில்லியனூர் வட்டம் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.[1] இக்கிராமானது தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைப் பகுதியாகும்.
மக்கட் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இக்கிராமத்தில் 1709 குடும்பங்கள் உள்ளன. இங்கு மொத்தம் மக்கள் தொகை 7253 ஆகும். இதில் ஆண்கள் 3608 மற்றும் பெண்கள் 3645 ஆகும்.[2]
போக்குவரத்து
[தொகு]இது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு நடுவே உள்ளது. இங்கிருந்து விழுப்புரம் 16 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி 24 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள விமான நிலையம், புதுச்சேரி விமான நிலையம் (25 கி.மீ) ஆகும்.
கல்வி நிலையங்கள்
[தொகு]- சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்பக் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- சிறீ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
- வெங்கடேசுவரா கல்வியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
வார சந்தை
[தொகு]இக்கிராமத்தில் ஒவ்வொறு செவ்வாய்கிழமை அன்று வார சந்தை நடைபெறுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "madagadipet".
- ↑ "madagadipet demographic".
- ↑ "மதகடிப்பட்டு வாரச் சந்தையில் விற்பனை மந்தம்".தினமணி (சனவரி 11, 2017)