உள்ளடக்கத்துக்குச் செல்

அபிஜித் பேனர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிஜித் பேனர்ஜி
Abhijit Banerjee
பிறப்புஅபிஜித் வினாயக் பேரர்ஜி
21 பெப்ரவரி 1961 (1961-02-21) (அகவை 63)
மும்பை, இந்தியா
துறைஅபிவிருத்திப் பொருளியல்,
பணியிடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
கல்விமாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா
கொல்கத்தா பல்கலைக்கழகம் (BSc)
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (முதுகலை)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (PhD)
ஆய்வு நெறியாளர்எரிக் மாஸ்க்கின்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
எஸ்தர் டுஃப்லோ[1]
டீன் கர்லான்[2]
பெஞ்சமின் யோன்சு
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2019)
துணைவர்அருந்ததி தூலி (மணமுறிவு)
எஸ்தர் டுஃப்லோ (2015–இன்று)
பிள்ளைகள்3

அபிச்சித் பேனர்ச்சி (Abhijit Banerjee; வங்காள மொழி: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, பிறப்பு: 21 பெப்ரவரி 1961) இந்தியாவில் பிறந்த அமெரிக்கப் பொருளியலாளர் ஆவார்.[3][4] இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் போர்டு அறக்கட்டளையின் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கு 2019 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருடன் இணைந்து வழங்கப்பட்டது. "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான அவர்களின் சோதனை அணுகுமுறைக்காக" வழங்கப்பட்டது.[5][6] இவரும் இவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் நோபல் பரிசு பெறும் ஆறாவது தம்பதியர் ஆவர்.[7][8]

பேனர்ஜி, (எஸ்தர் டுஃப்லோ, செந்தில் முல்லைநாதன் ஆகிய பொருளியலாளர்களுடன் இணைந்து) அப்துல் லதீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் துணை நிறுவனராக உள்ளார்.[9] இந்த ஆய்வகம் வறுமை ஒழிப்புக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்காகத் தொடங்கப்பட்டது. பேனர்ஜி நிதி அமைப்புகள் மற்றும் வறுமைக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார். இவர் பொருளாதார வளர்ச்சித் திறனாய்வுப் பணியகத்தின் முந்தைய அதிபராகவும், தேசியப் பொருளாதார ஆய்வத்தின் இணை ஆய்வாளராகவும், பொருளாதாரக் கொள்கைக்கான ஆராய்ச்சி மையத்தில் சக ஆராய்ச்சியாளராகவும், கெய்ல் நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சியாளராகவும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும், எகனாமெட்ரிக் சொசைடியின் உறுப்பினராகவும் உள்ளார். "புவர் எகனாமிக்ஸ்" என்ற ஆங்கில நூலை பேனர்ஜீயும், எஸ்தர் டுஃப்லோ என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர். இவர் இந்தியாவின் பிளாக்சா பல்கலைக்கழகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[10]

படிப்பு, பணி

[தொகு]

கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் இளநிலைப் படிப்பையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பையும் பயின்ற இவர் , ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் பட்டம் பெற்று, ஹார்வர்ட் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி புரிந்த பின் தற்போது எம்ஐடியில் சர்வதேசப் பேராசிரி யராகப் பணி புரிந்து வருகிறார். அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் (J-PAL – ஜே-பால்) நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Duflo, Esther (1999), Essays in empirical development economics. Ph.D. dissertation, Massachusetts Institute of Technology.
  2. Karlan, Dean S. (2002), Social capital and microfinance. Ph.D. dissertation, Massachusetts Institute of Technology.
  3. "Abhijit Vinayak Banerjee Economics Department MIT". மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம். 14 October 2019. Archived from the original on 27 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Economics Nobel for Indian-American | Tribune India". tribuneindia.com. 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  5. Royal Swedish Academy of Sciences(14 October 2019). "The Prize in Economic Sciences 2019". செய்திக் குறிப்பு.
  6. Desk, The Hindu Net (14 October 2019). "Abhijit Banerjee among three to receive Economics Nobel" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/international/india-origin-abhijit-banerjee-among-three-to-receive-economics-nobel/article29680388.ece. 
  7. "Abhijit Banerjee, Esther Duflo Winning the Nobel Prize Together is #CoupleGoals". News 18. 14 October 2019. பார்க்கப்பட்ட நாள் 14 October 2019.
  8. Hannon, Dominic Chopping and Paul. "Nobel Prize in Economics Awarded for Work Alleviating Poverty". WSJ. பார்க்கப்பட்ட நாள் 14 October 2019.
  9. "Abhijit Banerjee, Esther Duflo and Michael Kremer win 2019 Nobel Economics Prize". The Times of India. 14 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  10. "Plaksha University". plaksha.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 October 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஜித்_பேனர்ஜி&oldid=3704426" இலிருந்து மீள்விக்கப்பட்டது