பீட்டர் ஆர்தர் டயமண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் ஆர்தர் டயமண்ட்
Diamond in 2010
பிறப்புஏப்ரல் 29, 1940 (1940-04-29) (அகவை 83)
நியூயார்க் நகரம், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்
துறைஅரசியல் பொருளியல், பொதுநல பொருளியல், நடத்தை பொருளியல்
பயின்றகம்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
யேல் பல்கலைக்கழகம்
விருதுகள்நோபல் பரிசு
2010
வாழ்கைத்துணைபிரிசிலா கேத்தே மிரிக்
ஆய்வுக் கட்டுரைகள்

பீட்டர் ஆர்தர் டயமண்ட் (Peter Arthur Diamond, பிறப்பு: ஏப்ரல் 29, 1940) ஒரு அமெரிக்க பொருளியலாளர். இவர் அமெரிக்க சமூகப் பாதுகாப்புக் கொள்கையின் பகுப்பாய்வு மற்றும் 1980 - 1990 ஆண்டுகளின் இடைபட்ட காலத்தில் சமூகப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் குழுவின் ஆலோசகர் பணிக்காக அவர் அறியப்பட்டார். 2010 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு தாலே.தோ.மார்டென்சென் மற்றும் கிறிஸ்டோபர் அ. பிசாரைட்ஸ் உடன் இணைந்துப் பெற்றார். பீட்டர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் பேராசிரியர்.

வாழ்க்கை[தொகு]

டயமண்ட் நியூயார்க் நகரத்தில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.[1][2][3] அவரது தாத்தா பாட்டிமார் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்கள். அவருடைய தாயின் பெற்றோர் மற்றும் ஆறு மூத்த உடன்பிறந்தோர் போலந்தில் இருந்து வந்தனர். இவருடைய பெற்றோர், 1908 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள், பெரும்பாலும் நியூயார்க் நகரத்தில் வளர்ந்ததால் அவர்கள் பெருநகரப் பகுதிக்கு வெளியே சென்றதில்லை.

பீட்டர் யேல் பல்கலைகழகத்தில் 1960 ஆம் ஆண்டில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் மற்றும் 1963 ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.[4] 1963 முதல் 1965 ஆம் ஆண்டு வரை கலிபோர்னியா பல்கலைகழகத்தில், உதவிப் பேராசிரியராக இருந்தார் மற்றும் 1966 ஆம் ஆண்டில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் இணை பேராசிரியாரக இருந்தார்.[4] பின்னர் 1970 ஆம் ஆண்டு பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மேலும் 1985 முதல் 1986 வரையில் பொருளாதார துறையின் தலைவராகவும் இருந்தார். 1997 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில் சிறந்த பேராசிரியர் என்று அறிவிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]